Back
சிற்பம்

இராவணானுக்கிரகமூர்த்தி

இராவணானுக்கிரகமூர்த்தி
சிற்பத்தின் பெயர் இராவணானுக்கிரகமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
சிவநேசனான இராவணன் தன் அன்பின் மிகுதியால் கயிலை மலையை இலங்கைக்கு எடுத்துச் செல்ல விரும்பி, தன் இருபது கைகளாலும் மலையைப் பெயர்க்கும் காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கயிலை மலையில் சிவனும் உமையும் அமர்ந்திருக்க அம்மலையை தன் இருபது கரங்களால் இராவணன் பெயர்த்தெடுக்கிறான். கருடாசனத்தில் இராவணன் இருபது கைகளை இருபுறம் விரித்து மலையைப் பெயர்க்கிறான். மலையில் இறைவன் அருகில் உமையாளோடு அமர்ந்துள்ளார். தேவி இருகைகளில் வலது கையை ஊன்றிய கையாகவும், இடது கையை தோள் வரை மடக்கிய கையாகவும் கொண்டுள்ளார். இறையனார் ஜடாபாரம் அணிந்துள்ளார். அவரின் வலதுபுறம் இருகைகளையும் கட்டிய நிலையில் பணிவுடன் சண்டேசர் நிற்கிறார். சண்டேசரின் அருகில் மற்றொருவர் நிற்கிறார். இவர்கள் அனைவரும் கூடியிருக்கும் கைலாய மலையை இராவணன் பெயர்க்கிறான். அவனுக்கு பன்முகங்கள் காட்டப்பட்டுள்ளன. ஆடையணிகள் நன்கு காட்டப்பட்டுள்ளன. இருபது கைகளிலும் கையணிகள் காட்டப்பட்டுள்ளன.
குறிப்புதவிகள்
இராவணானுக்கிரகமூர்த்தி
சிற்பம்

இராவணானுக்கிரகமூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்