சிற்பம்

தட்சிணாமூர்த்தி

தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின் பெயர் தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் திருவாலீஸ்வரம்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன்
விளக்கம்
தென்முகக் கடவுள் மறையோதிய நிலையில் அமர்வு
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
தட்சிணாமூர்த்தி என்பதற்கு தென்திசைக் கடவுள் என்று பொருள். கோயிலில் தெற்கு நோக்கிய கோட்டத்தில் இவரை வைத்தல் மரபு. எனவே தென்முகக் கடவுள் எனவும் அழைக்கப்படுகிறார். தட்சிணாமூர்த்தி என்பதற்கு அகத்தியர் என்ற பொருளையும் தமிழ் அகராதி சுட்டுகிறது. தட்சிணாமூர்த்தி என்றும் தென்முகக்கடவுள் என்றும் போற்றப்படும் இவர் ரிஷிகளுக்கு யோகத்தையும் ஞானத்தையும் குருவாக அமர்ந்து உபதேசிக்கும் வடிவமாகும். சிவனின் லீலாமுர்த்திகள் இருபத்தைந்தில் சௌமியம் (சாந்தம்) சம்ஹாரம் (வதம்), நிருத்தம் (நடனம்), யோகம் (தியானம்) அனுக்கிரகம் (அருளல்) ஆகிய ஐந்தொழில்களில் யோக நிலையில் இருந்து ரிஷிகளுக்குக் கல்வியையும், ஞானத்தையும், யோகத்தையும் உபதேசிக்கும் முர்த்தியாகத் தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பார். தட்சிணம் என்றால் தென்திசை என்று பொருள், தென்திசையை நோக்கி அமர்ந்திருப்பதனால் தட்சிணாமூர்த்தி என்றழைக்கப்படுகிறார். தமிழ் இலக்கியங்களில் சிலப்பாதிகாரத்தில் “தெக்கினான்” என்றும், “ஆலமர் செல்வன்” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆகவே, தென்திசை அறிவும், ஞானமும் நிறைந்த திசையாகக் கருதப்படுகிறது. இவர் மகாராஜலீலாசனம், அர்த்தபத்மாசனம், யோகாசனம், உத்குடிக்காசனம் போன்ற ஆசனங்களில் அமர்ந்திருப்பார். பிரம்மனின் புதல்வர்களான சனக, சனந்தன, சனகாதி, சனற்குமாரர் என்னும் முனிவர்கள் நால்வர்க்கு வேதத்தின பொருளுரைப்பதாக சிவனின் இவ்வடிவம் அமைந்துள்ளது. திருவாலீஸ்வரம் கைலாச நாதர் கோயிலில் தென்முகக் கடவுள் வீராசனத்தில் வலது காலை தொங்கவிட்டு குப்புற படுத்துள்ள முயலகத்தின் மீது வைத்தபடியும், இடது காலை மடக்கி வலது தொடையின் மீது வைத்தபடியும் அமர்ந்துள்ளார். கொக்கிறகுடன் கூடிய தலையணி கொண்டுள்ளார். ஜடாபாரத்துடன் விளங்கும் ஆலமர்ச் செல்வன் நெற்றியில் மூன்றாவது கண்ணைக் கொண்டுள்ளார். நெற்றில் பட்டையான அணி காணப்படுகிறது. நான்கு திருக்கைகள் கொண்டுள்ளார். பின்னிரு கரங்களில் மழுவையும், மானையும் பற்றியுள்ளார். வலது முன் கை சின் முத்திரை காட்டுகிறது. இடது முன் கை மடக்கிய இடது காலின் மீது தளிர்க் கையாக அமைந்து, கீழே உள்ள பாம்பின் வாயில் ஒரு விரலை வைத்துள்ளார். வலது காதில் பத்ர குண்டலமும், இடது காதில் வியாழ குண்டலமும் அணிந்துள்ளார். மார்பில் புரிநூல், வயிற்றில் உதரபந்தம், கழுத்தில் சரப்பளி, கைகளில் தோள்வளை, முன் வளைகள், கால்களில் அரியகம் ஆகியன அழகு செய்கின்றன.
குறிப்புதவிகள்
தட்சிணாமூர்த்தி
சிற்பம்

தட்சிணாமூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்