Back
சிற்பம்

கங்காவிசர்ஜன மூர்த்தி

கங்காவிசர்ஜன மூர்த்தி
சிற்பத்தின் பெயர் கங்காவிசர்ஜன மூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
உமையாளின் ஊடல் தீர்க்கும் பெருமான் கங்காதரர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கங்கையை தலையில் ஏற்றதால் பெருமானோடு ஊடல் கொண்டுள்ள உமையாளின் ஊடல் தீர்க்கும் பெருமானாய் கங்காதரர் விளங்குகிறார். இச்சிற்பம் இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறையால் புனரமைக்கப்பட்ட சிற்பம். எனவே ஆடையணிகள் பழமையிலிருந்து வேறுபட்டுள்ளன. அணைத்த பிரான் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். இடது கை உமையின் முகவாயைத் தொட்டு நிமிர்த்துகிறது. ஊடலினால் தலை திருப்பியுள்ள உமையை தன் பக்கம் திருப்ப முகவாயைத் தொட்டு திருப்புகிறார். இடது காலை தொங்கவிட்டு வலது காலை மடித்து இடது தொடையின் மீது வைத்த நிலையில் அமர்ந்திருக்கும் சிவனார் உமையின் பக்கமாய் திரும்பி அமர்ந்துள்ளார். பின் இடது கை யோக முத்திரையாய் உள்ளது. உமையன்னை இடது கையை பீடத்தில் ஊன்றி வலது கையை மார்புக்குக் கீழே மடித்த நிலையில் வைத்துள்ளார். இடது காலை ஊன்றி, வலது கால் ஊடலினால் இறைவனை விட்டு நகர்ந்து செல்லும் பாணியில் உள்ளது. இறைவன் காலடியில் பூதம் ஒன்று அமர்ந்துள்ளது.
குறிப்புதவிகள்
கங்காவிசர்ஜன மூர்த்தி
சிற்பம்

கங்காவிசர்ஜன மூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்