சிற்பம்

சக்ரதானமூர்த்தி

சக்ரதானமூர்த்தி
சிற்பத்தின் பெயர் சக்ரதானமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
சக்கராயுத மூர்த்தியை திருமால் ஆயிரம் மலர்களால் அருச்சித்து சக்கரம் பெற்ற காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சிவபெருமானிடமிருந்து சக்கராயுதத்தை பெறுவதற்காக திருமால் அவரை ஆயிரம் தாமரை மலர்களால் அருச்சித்து வழிபடும் பொழுது, அவருடைய அன்பை சோதிக்க எண்ணிய சிவனார் ஆயிரம் மலர்களில ஒன்றைக் குறையச் செய்கிறார். ஒரு மலர் குறைந்ததால் தாமரை போன்ற தன் கண்களில் ஒன்றை எடுத்து திருமால் அவரை வழிபடும் காட்சி. உயர்ந்த தளத்தில் சிவபெருமான் உமையுடன் அமர்ந்துள்ளார். கீழே விஷ்ணு கருடாசனத்தில் அமர்ந்த நிலையில் சக்கராயுத மூர்த்தியை வேண்டுகிறார். ஜடாபந்தம் கொண்டுள்ள சிவனார் தன் நான்கு கைகளில் பின்னிரு கைகளால் சடைபுரியை பிடித்துள்ளது போல் தெரிகிறது. முன்னங்கைகளில் வலது கை ஆசனத்தில் ஊன்றியபடி நித்ரா முத்திரையாகவும், இடது கை கடக முத்திரையாகவும் அமைந்துள்ளன. வலது காலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைத்தபடி அமர்ந்துள்ள சிவபெருமானின் முகம் புன்னகை அரும்பியுள்ளது. எழிற் மேனியராய் விளங்கும் இறைவர்க்கு கண்டிகை, சவடி ஆகியன கழுத்தணிகளாகவும், தோள்மாலை, கடகவளை, முன்வளை ஆகியன கையணிகளாகவும், நீள்காதுகளில் பனையோலை சுருளும் விளங்குகின்றன. கீழே அமர்ந்துள்ள திருமால் கிரீட மகுடம் தரித்துள்ளார். முன் வலது கையில் தாமரை மலரைக் கொண்டுள்ளார். இடது கையால் தன் இடது கண்ணை தோண்ட முற்படுகிறார். இவ்வரியக் காட்சியை மேலிந்து காணும் தேவர் ஒருவர் முகவாயில் கை வைத்து வியக்கிறார்.
குறிப்புதவிகள்
சக்ரதானமூர்த்தி
சிற்பம்

சக்ரதானமூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்