சிற்பம்

ஜேஷ்டா தேவி

ஜேஷ்டா தேவி
சிற்பத்தின் பெயர் ஜேஷ்டா தேவி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
வளங்களுக்குரிய தேவியாக பண்டு வழிபடப்பட்ட மூத்த தேவி தனது பரிவாரங்களுடன் அமர்ந்திருக்கும் காட்சி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சேட்டை தேவி இரண்டு கால்களையும் தொங்கவிட்டவாறு பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். பருத்த வயிறும், பெரிய தனங்களும் கொண்டுள்ள மூத்த தேவி வளத்திற்குரிய கடவுளாக பண்டு வழிபடப்பட்டு வந்தவள். இவளை தூக்கக் கடவுள் என திருக்குறள் குறிப்பிடுகிறது. சேட்டையின் மகன் மாந்தன் வலதுபுறத்தில் நிற்கிறான். இடது புறத்தில் மாந்தி நிற்கிறாள். மாந்தியின் மேலே ஒரு பெண் சாமரம் வீசுகின்றாள். தேவியின் வலது காலருகே கணம் ஒன்று தன் தலையில் தட்டு போன்ற ஒன்றை வைத்துள்ளது. இதன் மேல் தாங்கியாக சேட்டை தேவி வலது கையை வைத்துள்ளாள். கணுக்கால் வரையிலான ஆடை அணிந்து, தலையில் மகுடம் சூடி, கழுத்தில் சரப்பளி துலங்க, கைகளில் வளைகள் விளங்க அமர்ந்துள்ளாள்.
குறிப்புதவிகள்
ஜேஷ்டா தேவி
சிற்பம்

ஜேஷ்டா தேவி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 18
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்