சிற்பம்
யாளி
யாளி
சிற்பத்தின் பெயர் | யாளி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குன்னாண்டார் கோயில் |
ஊர் | குன்னாண்டார் கோயில் |
வட்டம் | கீரனூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | பிற வகை |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
விலங்கு எனப்படுவதோர் வியப்பு….யாளி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
யாளி ஒரு கற்பனை விலங்கு என்பது பலரது கருத்து. ஆயினும் இக்கருத்து ஆய்வுக்குரியது. தமிழகக் கோயில்களில் இடம் பெறும் யாளி அதிக ஆற்றல் வாய்ந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. யானையை தன் துதிக்கையால் தூக்கிய நிலையிலும், சிம்மத்தை பாய்ந்து தாக்கும் நிலையிலும் யாளிகள் சிற்பங்களில் காட்டப்பட்டுள்ளன. யாளி ஒரு தொன்ம உயிரினமாக இருந்து கால சுழற்சியால் அழிந்து போன விலங்கினத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடலமைப்பையும், பிடரியையும் கொண்டுள்ளன. சிம்ம யாளி, மகர யாளி, யானை யாளி என யாளி மூன்று வகைகளில் சிற்பங்களில் வடிக்கப்பட்டுள்ளன. யாளி வளமைக்கும், ஆற்றலுக்கும், வீரத்திற்குமான குறியீடாக விளங்குகிறது. யாளி நவக்கிரகங்களின் ஒன்றான புதனின் வாகனமாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. கற்றளிகள் உருவாகத் தொடங்கிய பல்லவர் காலத்திலிருந்தே தமிழகக் கோயில்களில் யாளிகள் முக்கிய இடம் பெறுகின்றன. கோயில்களில் பெரும்பாலும் யாளிகள் யாளித்தூண்களாகவே அதிக அளவில் காட்டப்பட்டுள்ளன. பழங்காலத்தில் தூண் வழிபாடே சிறப்புற்றிருந்தது. சிவலிங்கமும் தூண் வழிபாட்டில் ஒரு வகை தான் என்று உரைப்போரும் உண்டு. சங்க இலக்கியங்களில் இத்தூண் வழிபாடு கந்து வழிபாடு என அறியப்படுகிறது. எனவே தூண்களைத் தாங்கும் முகமாக, தூண்களாக அமைக்கப்பட்டுள்ள யாளிகள் மேல் ஆய்வுக்குரியவை. தூணில் புடைப்புச் சிற்பமாக காட்டப்பட்டுள்ள இந்த சிம்ம யாளி உடலை நேராகவும், தலை பின்னோக்கியும் திருப்பியுள்ளது. முன்னங்கால்கள் பாய்ந்து தாக்கு நிலையில் உள்ளன. யாளியின் வாயிலிருந்து கொடி போன்ற ஒன்று வெளி வருகிறது. யாளியின் கண் உயிரோட்டமுடையதாக காட்டப்பட்டுள்ளது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யாளி
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |