சிற்பம்

அடியவர் (சண்டேசர்)

அடியவர் (சண்டேசர்)
சிற்பத்தின் பெயர் அடியவர் (சண்டேசர்)
சிற்பத்தின்அமைவிடம் குன்னாண்டார் கோயில்
ஊர் குன்னாண்டார் கோயில்
வட்டம் கீரனூர்
மாவட்டம் புதுக்கோட்டை
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர்
விளக்கம்
பணிவின் உருவாய் கைகளை கட்டிக் கொண்டு நிற்கும் அடியவர் சண்டேசர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கருவறை நுழைவின் புறச்சுவரில் அமைக்கப்பட்டுள்ள கோட்டத்தின் தலைப்பகுதியை தரங்கப் போதிகை அலங்கரிக்கிறது. கோட்டத்தின் மையத்தில் அடியவர் ஒருவர் பணிவாக கைகளைக் கட்டிக் கொண்டு, தலையை சற்று தாழ்த்தி சமபாதத்தில் நிற்கிறார். ஜடாபாரம் தலைக்கோலமாய் கொண்டுள்ள அடியவர் காதுகளில் பெரிய வளையங்களும் மார்பில் மணிகள் அல்லது முத்து, உருத்திராக்கத்திலான முப்புரி நூலையும் அணிந்துள்ளார். கழுத்திலும் மேற்சொன்ன பொருட்களால் ஆன அணியைக் கொண்டுள்ளார். கைகளில் தோள் வளைகளும், முன் வளைகளும் அமைந்துள்ளன. கணுக்கால் வரையிலான நீண்ட நூலாடையை கால்களுக்கு குறுக்கே மடித்துக் கட்டியுள்ளார். இடைக்கட்டு எனப்படும் கடி சூத்திரம் தொடை வரை இறங்கியுள்ளது.
குறிப்புதவிகள்
அடியவர் (சண்டேசர்)
சிற்பம்

அடியவர் (சண்டேசர்)

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்