சிற்பம்
சாக்கிய நாயனார்
சாக்கிய நாயனார்
சிற்பத்தின் பெயர் | சாக்கிய நாயனார் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
வார்கொண்ட வனமுலையாள் உமைபங்கன் கழலே மறவாது கல்லெறிந்த சாக்கியர்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
சாக்கிய நாயனார் திருச்சங்கமங்கையில் வேளாளர் குடியில் தோன்றினார். பௌத்த சமயத்தைத் தழுவியிருந்த சாக்கிய நாயனார் காஞ்சிபுரத்தை அடைந்து பௌத்த சமயக் கொள்கைகளை கைக்கொண்டிருந்த காலத்தே ஒரு நாள் தன் இல்லத்தின் அருகில் இருந்த சிவலிங்கத்தினைக் கண்டு மெய்ஞ்ஞானம் கைவரப் பெற்றார். சிவலிங்கத்தை வழிபட எண்ணிய சாக்கியர் அருகேயிருந்த கல்லை எடுத்து இலிங்கத்தின் மேல் எறிந்தார். அதனை மலராக எண்ணி சிவபெருமான் ஏற்றுக் கொண்டார். நாள்தோறும் உணவு உண்ணுவதற்கு முன்னதாக இச்செயலை தவறாது செய்து வந்தார் சாக்கிய நாயனார். ஒருநாள் அச்செயலை மறந்து உணவு உண்ண ஆயத்தமான போது ‘இன்று எம் பெருமானைக் கல்லால் எறிய மறந்துவிட்டேன்’ என்று விரைந்தோடிச் சிவலிங்கத்தின் முன்சென்று ஆராத வேட்கையால் ஒரு கல்லை எடுத்து அதன் மேல் எறிந்தார். அவரது அன்பிற்கு உவந்த சிவபெருமான் விடைமீது உமையம்மையாருடன் தோன்றி அருளினார். அத்தெய்வக்காட்சியைக் கண்ட சாக்கிய நாயனார், தலைமேல் இருகைகளையும் குவித்து நிலமிசை வீழ்ந்திறைஞ்சினார். சிவபெருமான் சிவலோகத்தில் தம்பக்கத்தேயிருக்கும் பெருஞ்சிறப்பினை அவர்க்கு அருளினார். இச்சிற்பத்தில் இலிங்கத்தின் மீது சாக்கிய நாயனார் கல் எறிகிறார். பௌத்தர்களுக்குரிய நீள் தொள்ளைக் காதுகளையும், சிரஸ்திரகம் என்னும் சுருளான கேச அமைப்பினையும் பெற்று, மார்பில் உத்தரீயம் எனப்படும் மேலாடை குறுக்காக செல்ல, இடைக்கட்டுடன் கூடிய கணுக்கால் வரையிலான ஆடை அணிந்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
சாக்கிய நாயனார்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |
தொடர்புடைய சிற்பம்
சண்டேசுவர நாயனார்
சண்டேசுவர நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
16
|
0
|
0
|
0
சிறப்புலி நாயனார்
சிறப்புலி நாயனார்
சைவம், கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
16
|
0
|
0
|