சிற்பம்

சந்திரசேகரர்

சந்திரசேகரர்
சிற்பத்தின் பெயர் சந்திரசேகரர்
சிற்பத்தின்அமைவிடம் முக்தேஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
தட்சனின் சாபத்தால் தன் கலையிழந்த சந்திரனை தன் தலையில் சூடியருளிய தேவர் சந்திரசேகரர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சமபாதத்தில் நிற்கும் சிவனார் நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். முன்னிரு கைகளில் வலது கை அபய முத்திரையும், இடது கை தொடையில் வைத்த கடி முத்திரையாகவும் உள்ளன. பின்னிரு கைகளில் வலதில் மழு உள்ளது. இடது கையில் உள்ள பொருள் இன்னதென்று அறியக்கூடவில்லை. முப்புரிநூல் வலது கை வழியாக இடது தோளின் வழி செல்கிறது. முப்புரிநூலின் பிரம்மமுடிச்சு இடமார்பில் அமைந்துள்ளது. நீள்காதுகளில் அணிகலன்கள் காட்டப்பட்டுள்ளன. கழுத்தில் சவடி, கண்டிகை, சரப்பளி ஆகிய அணிகலன்கள் உள்ளன. கைகளில் முன்வளைகள் தெரிகின்றன. சந்திரனுக்கு அபயம் அளிக்கும் மூர்த்தியாக சந்திரசேகரர் நின்ற நிலையில் உள்ளார்.
குறிப்புதவிகள்
சந்திரசேகரர்
சிற்பம்

சந்திரசேகரர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்