சிற்பம்
வீணாதர தட்சிணாமூர்த்தி (வீணாதரர்)
வீணாதர தட்சிணாமூர்த்தி (வீணாதரர்)
சிற்பத்தின் பெயர் | வீணாதர தட்சிணாமூர்த்தி (வீணாதரர்) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கொடும்பாளுர் மூவர் கோயில் |
ஊர் | கொடும்பாளுர் |
வட்டம் | விராலிமலை |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/இருக்குவேள் பூதி விக்கிரமகேசரி |
விளக்கம்
கலைகளில் வல்லவரான தென்முகக் கடவுள் வீணை மீட்டும் வடிவம் - வீணாதரமூர்த்தி
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
ஆடல்கலையில் சிறந்தவரான சிவபெருமான் இசைக்கலையிலும் தேர்ந்தவர் என்பதைக் காட்டுவதாக வீணையை மீட்டும் பெருமானின் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் மீது வலது காலை ஊன்றி, இடது காலை சற்று தளர்வாக வைத்து வைஷ்ணவ நிலையில் நின்றுள்ளார். பூரிம முகப்புடன் கூடிய ஜடாபாரம் தரித்தும் , பின்னால் நீண்ட சடைக்கற்றைகள் தொங்குகின்றன. நெற்றியில் தொய்யகத்துடன் கூடிய நெற்றிப்பட்டை விளங்குகிறது. நெற்றியின் மத்தியில் முக்கண் திகழ்கிறது. நீண்ட காதுகளில் வலது காதில் பத்ரகுண்டலமும், இடது காதில் வியாழ குண்டலமும் அணிந்துள்ளார். கழுத்தில் சரப்பளி தொய்யகத்துடன் விளங்குகிறது. மார்பில் முப்புரிநூல் துலங்குகிறது. நாற்கைகளில் கீழிரு கைகள் வீணையை மார்போடு அணைத்து மீட்டியபடி உள்ளன. பின்னிரு கைகளில் வலது கை கடக முத்திரையும் (நண்டு பிடி), இடது கையில் அக்க மாலையும் கொண்டுள்ளார். தோள்களில் வாகு மாலையும், கைகளில் தோள்வளைகளும், முன் வளைகளும், விரல்களில் வளையங்களும் அணிந்துள்ளார். இடையில் அரைப்பட்டிகை சிம்மயாளி முகப்புடன் விளங்குகின்றது. அரையாடை அணிந்துள்ளார். ஆடையின் இடைக்கட்டு முடிச்சு இடது புறம் பறக்கிறது. புன்னகைத்த முகமாய் இசை மீட்டுகிறார் இசை வல்லான்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
வீணாதர தட்சிணாமூர்த்தி (வீணாதரர்)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |