சிற்பம்

அந்தணர் நடுகல்
சிற்பத்தின் பெயர் | அந்தணர் நடுகல் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மதுரை வடகரை |
ஊர் | வடகரை |
வட்டம் | திருமங்கலம் |
மாவட்டம் | மதுரை |
சிற்பத்தின் வகை | எல்லைக்கல்-புடைப்புச் சிற்பம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருக்குறளில் அந்தணன்/அந்தணர் என்ற சொல் மூன்று இடங்களில் வருகின்றது. “அறவாழி அந்தணன்“ “அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்“ “அந்தணர் நூற்கும் அறத்திற்கும் “ அறம் என்ற சொல் நல்ல பண்பை உணர்த்துவது, நீதி வழுவாத் தன்மையைக் குறிப்பிடும் சொல் ஆகும். எனவே செந்தன்மை பூண்டொழுகுபவர்கள் அந்தணர்கள் ஆகின்றனர். இத்தகைய அந்தணர்கள் நூல், கெண்டி, குடை ஆகியவற்றை வைத்துள்ள உருவமைதி பூண்டவர்கள். இத்தகு உருவமைதியுடன் கூடிய அந்தணர் ஒருவரின் கீறல் சிற்பம் மதுரை மாவட்டம் திருமங்கலத்திற்கு அருகேயுள்ள வடகரை என்னும் ஊரில் காணப்படுகின்றது. பலகைக் கல் ஒன்றில் இச்சிற்பம் கோட்டுருவமாக செதுக்கப்பட்டுள்ளது. இப்பலகைக் கல் இவ்வூரின் அந்தணர் குடியிருப்பைக் காட்டி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டதாகக் கருத இடமுண்டு.
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 19 |
பிடித்தவை | 0 |