சிற்பம்
மடை கருப்பசாமி
சிற்பத்தின் பெயர் மடை கருப்பசாமி
சிற்பத்தின்அமைவிடம் மதுரை தெற்குவாசல்
ஊர் மதுரை
வட்டம் மதுரை
மாவட்டம் மதுரை
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
மல்லல் மூதூர் என்று சங்க இலக்கியத்தில் போற்றப்படும் தொல்மதுரை நகரம் தெற்குவாசலில் நடுகல் வீரனாகக் கருதப்படும் கருப்பசாமி சிற்பம் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. கருப்பசாமி வீரம் செறிந்த, வலிமை வாய்ந்த, போர்க்குணம் மிக்க ஆண் தெய்வமாவார். தமிழ்நாட்டுக் காவல் தெய்வங்களிலேயே மிகவும் அதிக எண்ணிக்கையில் தென்தமிழகப்பகுதிகளில் வழிபடப்பட்டு வரும் நாட்டுப்புறத் தெய்வமாகக் கருப்புசாமி வணங்கப்படுகிறார். கருப்புசாமி இல்லாத குலதெய்வம் மற்றும் கிராமக் கோயில்களே இல்லை எனக் கூறும் அளவிற்கு இக்காவல் தெய்வம் தமிழரின் வாழ்வில் தொல்பழங்காலத்திலிருந்து வழிபாட்டில் இணைந்துள்ளார்.
மடை கருப்பசாமி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்