சிற்பம்

நவகண்ட வீரர்
சிற்பத்தின் பெயர் | நவகண்ட வீரர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மதுரை பாண்டிய வேளாளர் தெரு |
ஊர் | மதுரை |
வட்டம் | மதுரை |
மாவட்டம் | மதுரை |
சிற்பத்தின் வகை | தலைப்பலிக்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மதுரை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பெரியார் பேருந்து நிலையத்தின் அருகில் உள்ள திவ்யதேசங்களுள் ஒன்றான கூடலழகர் பெருமாள் கோயிலின் திருத்தேர் நிலை கொண்டுள்ள இடமான தேர்முட்டியை ஒட்டிச் செல்கின்ற தெருவானது பாண்டிய வெள்ளாளர் தெரு என்று அழைக்கப்படுகின்றது. இப்பழம்பெருந்தெருவில் பூர்வீகமாக குடிகொண்டுள்ள இனமக்கள் வழிவழியாக வணங்கி வருகின்ற உச்சினி மாகாளியம்மன் திருக்கோயிலை அடுத்து சற்று தள்ளி தெருவோரத்தில் ஒரு நவகண்ட சிற்பம் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. பெரிய மாரியாத்தா கோயில் என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகின்ற உச்சினி மாகாளியம்மன் திருக்கோயிலையடுத்து தெற்கு பக்கத்தில் வடக்கு பார்த்து இருக்கும் இந்த நவகண்ட சிற்பம் தனிச்சிற்பமாக காணப்படுகின்றது.
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |