சிற்பம்

கருப்பசாமி
சிற்பத்தின் பெயர் | கருப்பசாமி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மதுரை தல்லாகுளம் சட்டக்கல்லூரி |
ஊர் | மதுரை |
வட்டம் | மதுரை |
மாவட்டம் | மதுரை |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை தொல்லியல் ஆய்வு சங்கம் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மதுரை மாநகரின் சட்டக் கல்லூரிக்கு எதிர்புறம் இருக்கும் நடைபாதையில் அமைந்துள்ள ஒரு நடுகல் சிற்பத் தொகுதி மடை கருப்பசாமி என்ற பெயரில் மக்களால் வழிபடப்படுவது மதுரை மாநகர் களஆய்வில் கண்டறியப்பட்டது. மகாசிவராத்திரி முடிந்த இரண்டாவது வாரத்தில் நடைபெறும் பாரிவேட்டை அன்று இங்கு சேவல் பலி கொடுத்து ஒரு இன மக்கள் குழுவாக வந்து படையலிட்டு பூஜை செய்து வழிபடுகிறார்கள். இந்நடுகல் சிற்பத்தில் உள்ள வீரரும், அவர் மனையாளும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவராயும் இருக்கலாம். காவல் தெய்வம் கருப்பசாமி என்று உள்ளுர் மக்களால் வழிபடப்பெறுகிறது. சதி வழிபாடு தாய்த்தெய்வ வழிபாட்டில் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பெண் தெய்வ வழிபாட்டில் கன்னி வழிபாடு, பத்தினி வழிபாடு, பழையோள் வழிபாடு என்ற மூன்று நிலைகளில் பத்தினி வழிபாட்டின் வகையினைச் சார்ந்ததாக சதிக்கற்கள் மக்களால் வழிபடப்படுகின்றன. அவ்வகையில் இந்நடுகல் சதிக்கல்லாய் நிற்கிறது.
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |