Back
சிற்பம்

சோழ அரசர் குல ஆண்மகன்

சோழ அரசர் குல ஆண்மகன்
சிற்பத்தின் பெயர் சோழ அரசர் குல ஆண்மகன்
சிற்பத்தின்அமைவிடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை அரச உருவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன்
விளக்கம்
கருவறை விமானத்தின் வடபுற பஞ்சரக் கோட்டத்தில் நிற்கும் சோழர் காலத்திய ஆடவன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
கருவறையின் வடபுற பஞ்சரக் கோட்டத்தில் சோழர் குல ஆடவர் ஒருவர் சமபாதத்தில் நிற்கிறார். தலையில் ஜடாமகுடம் போன்று தெரிகிறது. நீள் காதுகளில் வியாழ குண்டலம் (பாம்பினை வளைத்து குண்டலம் போன்று அமைத்தல்) போல் தெரிகிறது. கழுத்தில் சரப்பளி, சவடி அணிந்துள்ளார். வயிற்றில் உதரபந்தம் காட்டப்பட்டுள்ளது. முப்புரி நூல் இடமார்பின் வழியே உடலின் பின்புறம் செல்கிறது. வலது கையை வரத முத்திரையாகவும், இடது கையை இடது தொடையில் வைத்தவாறும் (ஊரு முத்திரையாகவும்) உள்ளார். கைகளில் தோள் வளையும், மணிக்கட்டுப் பகுதியில் மூன்று வளையங்களும் காட்டப்பட்டுள்ளன. கை விரல்களில் நடுவிரல் தவிர பிறவற்றில் வளையங்கள் காணப்படுகின்றன. அரையாடையாக மரவுரியாடை இடையில் அணிந்துள்ளார். முகப்புடன் கூடிய இடைவார்ப் பட்டை இடையில் அணிந்து, அரைப் பட்டிகையிலிருந்து ஆடை முன்புறம் மடிந்து தொங்குகிறது. மெல்லிய உடல்வாகுடன் இளைஞராய் இவர் தோற்றமளிக்கிறார்.
குறிப்புதவிகள்
சோழ அரசர் குல ஆண்மகன்
சிற்பம்

சோழ அரசர் குல ஆண்மகன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்