சிற்பம்
வீணாதர தட்சிணாமூர்த்தி (வீணாதரர்)
வீணாதர தட்சிணாமூர்த்தி (வீணாதரர்)
சிற்பத்தின் பெயர் | வீணாதர தட்சிணாமூர்த்தி (வீணாதரர்) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
ஊர் | கும்பகோணம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன் |
விளக்கம்
கலைகளில் வல்லவரான தென்முகக் கடவுள் வீணை மீட்டும் வடிவம் - வீணாதரமூர்த்தி
|
|
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | முனைவர் கோ. சசிகலா |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
குடந்தைக் கீழ்க்கோட்டம் திருக்கோயிலின் கருவறை விமானத்தின் முதல் தளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சாலைக் கோட்டத்தில் வீணாதரர் அமர்ந்துள்ளார். சிவவடிவங்களுள் ஒன்றான வீணாதரர் கலைவடிவங்களுள் ஒன்றான ஆடல்வல்லானுக்கு இணையானது. ஜடாபாரம் அணிந்துள்ள வீணாதரமூர்த்தி இடது காலை குத்துக்காலிட்டு வலது காலை பாதி மடக்கி தொங்கவிட்டு உத்குடிகாசனத்தில் அமர்ந்துள்ளார். நீள் காதுகளில் மகர குண்டலமும், பத்ரகுண்டலமும் திகழ்கின்றன. கழுத்தில் சவடி அணிந்துள்ளார். மார்பில் முப்புரி நூல் செல்கிறது. நான்கு திருக்கைகளில் முன்னிருகைகள் மார்போடு தழுவியபடி வீணையைச் சாய்த்து மீட்டுகின்றது. பின் வலது கையில் உடுக்கையும், அக்கமாலையும் உள்ளன. கையணிகளாக கடகவளை, முன்வளைகள் தெரிகின்றன. இடையில் அரையாடை தெரிகிறது. நகைமுகத்துடன் வீணைமீட்டும் பெருமான் தலையைச் சற்று சாய்த்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
வீணாதர தட்சிணாமூர்த்தி (வீணாதரர்)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |