Back
சிற்பம்

வைகுண்டப் பெருமாள்

வைகுண்டப் பெருமாள்
சிற்பத்தின் பெயர் வைகுண்டப் பெருமாள்
சிற்பத்தின்அமைவிடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை வைணவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/முதலாம் ஆதித்த சோழன்
விளக்கம்
வைகுண்டத்தில் பெருமாள் வீற்றிருக்கும் காட்சி, பெருமாளின் அமர்ந்த கோலம்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் முனைவர் கோ. சசிகலா
குறிச்சொல்
சுருக்கம்
குடந்தைக் கீழ்க்கோட்டம் திருக்கோயிலின் கருவறை விமானத்தின் முதல் தளத்தின் மேற்குப் பகுதியில் உள்ள சாலைக் கோட்டத்தில் விஷ்ணு, பீடம் போன்று அமைந்த ஆதிசேஷன் மேல் அமர்ந்த நிலையில் உள்ளார். இக்கோலம் வைகுண்ட நாதர் திருக்கோலமாகும். ஐந்து தலையையுடைய ஆதிசேஷன் அவரின் தலைக்கு குடையாக நிற்க, விஷ்ணு உத்குடிகாசனத்தில் இடது காலை மடித்து குத்துக்காலிட்டும், வலது காலை தொங்கவிட்டு ஆதிசேஷன் வால் நுனியை பீடம் போல கொண்டு ஊன்றி உள்ளார். நான்கு திருக்கைகளில் மேலிரு கைகளில் வலதில் பிரயோகச் சக்கரமும், இடதில் சங்கும் தாங்கியுள்ளார். வலது முன்கையை (நித்ரா ஹஸ்தம்) ஊன்றியபடியும், இடது முன்கை மடக்கிய இடது முழங்காலில் தண்ட ஹஸ்தமாக வைத்துள்ளார். கிரீட மகுடராய், தோள்வரை நீண்டு தொங்கும் காதுகளில் மகரகுண்டலங்கள் அணிந்தும், கணுக்கால் வரை நீண்ட பட்டாடை அணிந்தும், கழுத்தில் அணிகள் விளங்க, கைகளில் தோள்மாலை, கேயூரம், முன்வளைகள் அணி செய்ய, மார்பில் (யக்ஞோப வீதம்) முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம் இவற்றுடன் சர்வலங்கார பூசிதராய் விளங்குகிறார். முகத்தில் அமைதி தவழ சாந்தசொரூபியாய் திகழ்கிறார்.
குறிப்புதவிகள்
வைகுண்டப் பெருமாள்
சிற்பம்

வைகுண்டப் பெருமாள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்