Back
சிற்பம்
கொற்றவை - மகிடமர்த்தினி
சிற்பத்தின் பெயர் கொற்றவை - மகிடமர்த்தினி
சிற்பத்தின்அமைவிடம் திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில்
ஊர் திருக்கோடிக்காவல்
வட்டம் மயிலாடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
அமைவிடத்தின் பெயர் திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
விளக்கம்
எட்டுத் திருக்கைகளுடன் விளங்கும் எண்டோள் வெற்றிச் செல்வியாக (அஷ்டபுஜ துர்க்கை) எருமைத்தலையின் மீது தேவி நிற்கிறாள். நாலிரு கைகளில் சங்கு, சக்கரம், அங்குசம், பாசம், வில், அம்பு ஆகிய கருவிகளும், காக்கும் முத்திரையும், கடி முத்திரையும் காட்டப்பட்டுள்ளன. அரையாடை அணிந்துள்ள வீரமகள் கரண்ட மகுடத்தினளாய், நீள் செவிகளில் மகரகுண்டலங்களை தரித்துள்ளாள். மார்பில் குஜபந்தம் காட்டப்பட்டுள்ளது. முத்துத் தாமங்களுடன் கூடிய கடி சூத்திரம் தொடை வரை நீண்டு தொங்குகிறது. வீரக்கழல்களில் சதங்கையும், பாடகமும் அணி செய்கின்றன. கைகளில் முன்வளைகளும், கடகமும், கேயூரமும் விளங்கிட, கழுத்தில் கண்டியும், சரப்பளியும் மிளிர்கின்றன. தேவி இடது காலை ஊன்றி, வலது காலை முன் வைத்த நிலையில் நிற்கிறாள். தேவியின் இருபுறமும் வெற்றி வேண்டி தலையை கொடுக்க முற்படும் தலைப்பலி வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இங்குள்ள சிற்பங்களின் உருவமைதி மிகவும் எழில் வாய்ந்தவை. மகிடமர்த்தினி கொற்றவை சோழர் காலத்திய தனிப்பெரும் கலைப்பாணி உடையவை. கருவறை திருச்சுற்றின் அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் அமைக்கப்படும் இத்தேவியின் கலை நளினம் சோழ சிற்பிகளுக்கு கைவந்த கலைபோலும். குடந்தை கீழ்கோட்டம், புள்ளமங்கை, புஞ்சை நல்துணையீச்சுவரம் ஆகிய கோயில்களில் அமைந்த மகிஷமர்த்தினியைப் போன்று இக்கோயிலின் உருவமைதியும் தோற்றப்பொலிவுடனும், நேர்த்தியுடனும் வடிக்கப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கொற்றவை - மகிடமர்த்தினி
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்