சிற்பம்

ஜேஷ்டா தேவி

ஜேஷ்டா தேவி
சிற்பத்தின் பெயர் ஜேஷ்டா தேவி
சிற்பத்தின்அமைவிடம் திருமூலநாதர் கோயில்
ஊர் பேரங்கியூர்
வட்டம் திருவெண்ணெய்நல்லூர்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு/சம்புவராயர்
விளக்கம்
மூத்த தேவியான சேட்டை
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
சேட்டை தேவி இரண்டு கால்களையும் தொங்கவிட்டவாறு பீடத்தின் மீது அமர்ந்திருக்கிறாள். பருத்த வயிறும், பெரிய தனங்களும் கொண்டுள்ள மூத்த தேவி வளத்திற்குரிய கடவுளாக பண்டு வழிபடப்பட்டு வந்தவள். இவளை தூக்கக் கடவுள் என திருக்குறள் குறிப்பிடுகிறது. பண்டைய தமிழர்கள் போர் வெற்றிக்காக கொற்றவையையும், வணிக வளத்திற்காக அய்யனாரையும் வழிபட்டனர். வேளாண்மை வளத்திற்காக மூத்த தேவியை வழிபட்டு இருக்கலாம். ஏனெனில் கலப்பை, முறம், காளை உருவம் போன்றவை வேளாண்மையோடு தொடர்புடையவை. சேட்டையின் மகன் மாந்தன் வலதுபுறத்தில் நிற்கிறான். அவன் எருமைத் தலையை உடையவன். இடது புறத்தில் மாந்தி நிற்கிறாள். தேவியின் இரு காலருகே கணங்கள் இரண்டு தன் தலையில் தட்டு போன்ற ஒன்றை வைத்துள்ளது. இதன் மேல் தாங்கியாக சேட்டை தேவி தன் இரு கைகளை வைத்துள்ளாள். கணுக்கால் வரையிலான ஆடை அணிந்து, தலையில் மகுடம் சூடி, கழுத்தில் சரப்பளி, ஆரம் துலங்க, கைகளில் வளைகள் விளங்க, மார்பில் முப்புரி நூல் அணிந்தவாறு அமர்ந்துள்ளாள். கால்களில் சதங்கைகள் காட்டப்பட்டுள்ளன. வலது மேற்புறம் காகக் கொடி காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
ஜேஷ்டா தேவி
சிற்பம்

ஜேஷ்டா தேவி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 23
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்