Back
சிற்பம்
புடைப்பு குறுஞ்சிற்பங்கள்
சிற்பத்தின் பெயர் புடைப்பு குறுஞ்சிற்பங்கள்
சிற்பத்தின்அமைவிடம் திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில்
ஊர் திருக்கோடிக்காவல்
வட்டம் மயிலாடுதுறை
மாவட்டம் நாகப்பட்டினம்
அமைவிடத்தின் பெயர் திருக்கோடிக்காவல் திருகோடீசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை கலை
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.13-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர்
விளக்கம்
சுவர்ப்பகுதியில் காணப்படும் குறுஞ்சிற்பங்கள் புடைப்புச் சிற்பங்களாகும். வரிசையாக காட்டப்பட்டுள்ள தேர்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு வடிவமைப்பில் இருப்பது நோக்கத்தக்கது. தேரோட்டம் நிகழும் போது தேரின் முன்னால் ஆடிச்செல்லும் ஆடற்பெண்டிர் காட்டப்பட்டிருப்பது சிறப்பு. தேர்க்குரவை என இலக்கியங்கள் போற்றும் தேரின் முன்பு ஆடிப்பாடி செல்லும் கோயிற்பெண்டுகளான தேவரடியார்கள் மற்றும் இசைக்கலைஞர்களின் சிற்பங்களாக இவை இருக்கலாம்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
குறும் புடைப்புச்சிற்பங்கள் பொதுவாக ஒரு கதை சொல்லும் தன்மையைக் கொண்டுள்ளதைக் காணலாம். புராணங்களும், இதிகாசங்களும், வாழ்வியல் காட்சிகள், போர்க்காட்சிகள், இயற்கை சூழலியல் ஆகியன சார்ந்த குறும்புடைப்புச் சிற்பங்களை கோயில்களில் அமைப்பது செய்தியறியும் முகமாகவும், உற்றுணரும் வகையிலும், முருகியல் உணர்வையும் தருவதன் வழியாக இருந்தது எனலாம். அவ்வகையில் கலை, விழாக்கள் தொடர்பான இந்த குறுஞ்சிற்பங்கள் விழாக்களின் பொழுதில் நடைபெற்ற ஆடல் பாடல் நிகழ்வுகளை கல்லில் காட்சிப்படுத்தப்பட்ட கவினுறு கலையாகத் திகழ்கின்றன.
குறிப்புதவிகள்
புடைப்பு குறுஞ்சிற்பங்கள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்