சிற்பம்
யோக சிவன்
யோக சிவன்
சிற்பத்தின் பெயர் | யோக சிவன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | மலையடிப்பட்டி சிவன் குடைவரைக் கோயில் |
ஊர் | மலையடிப்பட்டி |
வட்டம் | கீரனூர் |
மாவட்டம் | புதுக்கோட்டை |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
அன்னையர் எழுவர் தொகுதியில் உடன் வீற்றிருக்கும் யோக சிவன்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அன்னையர் எழுவர் தொகுதியில் சிவன் யோக பட்டத்தில் ஸ்வஸ்திகாசனத்தில் அமர்ந்துள்ளார். நான்கு திருக்கைகளில் வலது முன் கை அபய முத்திரையாகவும், இடது முன் கை தொடையில் வைத்தவாறும் அமைந்துள்ளன. ஜடாபாரத்தினை தலைக்கோலமாய் கொண்டு விளங்கும் சிவனார் பின் கைகளில் மழுவையும், மானையும் பிடித்துள்ளார். நீள் செவிகளில் பத்ர குண்டலங்களும், கழுத்தில் சவடியும், பெரு மணிகளால் ஆன ஆரமும் அணி செய்கின்றன. மார்பில் முப்புரிநூல், வயிற்றில் உதரபந்தம் , கைகளில் தோள்வளை, முன் வளைகள் ஆகியன விளங்குகின்றன. இடையில் இடைக்கட்டுடன் கூடிய அரையாடை துலங்க, கால்களில் காற்சவடி அணிந்துள்ளார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
யோக சிவன்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |