சிற்பம்
வில்லடியான் சாமி (நடுகல் வீரன்)
வில்லடியான் சாமி (நடுகல் வீரன்)
சிற்பத்தின் பெயர் | வில்லடியான் சாமி (நடுகல் வீரன்) |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | வெள்ளிமலை |
ஊர் | வெள்ளிமலை |
வட்டம் | மேலூர் |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | வெள்ளிமலை மலையடிவாரம் கருப்பர் கோயில் |
சிற்பத்தின் வகை | நடுகல் புடைப்புச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-12-ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள வௌ்ளிமலை என்னும் கிராமத்தில் உள்ள கருப்பர் கோயிலின் அருகே இரண்டு நடுகற்கள் புதிதாக கண்டறியப்பட்டுள்ளன. கி.பி.11-12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவ்விரண்டு நடுகற்களும் தமிழ்க் கல்வெட்டுகளைப் பெற்றுள்ளன. மேலும் இந்நடுகற்களில் இறந்த வீரர்களின் உருவங்கள் புடைப்புச்சிற்பங்களாக காட்டப்பட்டுள்ளன. உச்சிக்கொண்டையும், காதுகளில் வளையமும், மார்பில் சன்னவீரமும், கழுத்தணிகளும், இடையாடை முடிச்சுடன் கூடிய அரையாடையும் வீரர்களின் ஆடையணிகலன்களாகக் காட்டப்பட்டுள்ளன. முதலாம் நடுகல்லில் வீரர் வலதுகையில் வில்லைத் தாங்கியும், இடதுகையில் நீண்ட வாளைப் பிடித்தபடியும் நேராக நின்ற நிலையில் உள்ளார். இரண்டாவது நடுகல்லில் வீரர் இடதுகையில் வில்லைத் தாங்கியும், வலதுகையில் நீண்ட வாளைப் பிடித்தபடியும் நேராக நின்ற நிலையில் காட்டப்பட்டுள்ளார். இந்நடுகற்கள் கூறும் கல்வெட்டுச் செய்தியானது வடக்கில் மங்கலம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையில் இறந்த இருவீரர்களுக்கு நடுகல் எடுக்கப்பெற்றமையைக் குறிப்பிடுகிறது. முதலாம் நடுகல் சண்டையில் இறந்த செயிக்கன் என்பவனுக்கு அதியம் அரையன் மகன் கல்லூன்றித் தந்ததைக் குறிப்பிடுகிறது. இரண்டாம் நடுகல்லில் இறந்த வீரன் பெயர் வௌ்ளியான் எனக் கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | மதுரை கோ.சசிகலா |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக் கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கொட்டாம்பட்டியிலிருந்து வடமேற்கே சுமார் 14 கி.மீ. தொலைவில் உள்ள வௌ்ளி மலை, கருப்பர் கோயிலில் உள்ள வில்லடியான் சாமி இரண்டு நடுகற்கள் அமைந்துள்ளன. இந்நடுகற்கள் கி.பி.11-12-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. தமிழ் மொழியில் இக்கல்வெட்டுகள் அமைந்துள்ளன.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்
வில்லடியான் சாமி (நடுகல் வீரன்)
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Feb 2020 |
பார்வைகள் | 17 |
பிடித்தவை | 0 |