
நடராஜர்
சிற்பத்தின் பெயர் | நடராஜர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | அரசு மைய அருங்காட்சியகம், சென்னை |
ஊர் | திருவாலங்காடு |
வட்டம் | திருத்தணி |
மாவட்டம் | திருவள்ளூர் |
அமைவிடத்தின் பெயர் | செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | உலோகம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.11-ஆம் நூற்றாண்டு / சோழர் |
அளவுகள் / எடை | உயரம் 115 செ.மீ. |
விளக்கம்
நடராஜர் ஆனந்தத் தாண்டவ ஆடல் கோலத்தில் காட்டப்பட்டுள்ளார். நான்கு திருக்கைகளுடன் விளங்குகிறார். முன் வலது கை காக்கும் கரமாக விளங்க, பின்னிரு கைகளில் தமருகமும், தீயகலும் திகழ்கின்றன. செவிகளில் குண்டலங்களை அணிந்துள்ளார். கொக்கிறகு சூடிய தலைக் கோலத்தின் நடுவே கங்கையும் மதியும் விளங்குகின்றன. அரையாடை அணிந்துள்ள ஆடல்வல்லானின் உதரபந்தமாக நாகம் காட்டப்பட்டுள்ளது. குனித்த புருவமும் கோவை செவ்வாயிற் குமிண் சிரிப்பும் பனித்த தலையும் பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும் விளங்க, ஊன்றிய பாதம் அபஸ்மாரன் மேல் நிற்கவும், குஞ்சித பாதம் குழுமும் அடியார் வணங்கவும், ஐந்தொழில்களின் ஐயன் ஆடுகிறார் ஆலங்காட்டிலே. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
ஆடல்வல்லானின் செப்புத் திருமேனி சோழர் காலத்து படிமக்கலையாகும். உலகப்புகழ் பெற்ற ஆடல்வல்லானின் இத்திருமேனி அதன் வடிவமைப்புக்கு ஏதும் இணையற்றது. நடராசரின் ஆடற் திருக்கோலத்தில் காட்டப்பட்டுள்ள ஆடையணிகளும், தலைக்கோலமும் எழிற்வாய்ந்தவை. ஐம்பூத தத்துவத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஆடல்வல்லானின் திருவுரு இறைவனின் ஐந்தொழிலைக் குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. |
|
குறிப்புதவிகள்
|

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Jul 2018 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |