சிற்பம்

துர்க்கை

துர்க்கை
சிற்பத்தின் பெயர் துர்க்கை
சிற்பத்தின்அமைவிடம் பிறவாதீஸ்வரர் கோயில்
ஊர் காஞ்சிபுரம்
வட்டம் காஞ்சிபுரம்
மாவட்டம் காஞ்சிபுரம்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சாக்தம்
ஆக்கப்பொருள் மணல் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.8-ஆம் நூற்றாண்டு/இராஜசிம்மவர்மப் பல்லவன்
விளக்கம்
அர்த்தமண்டப வடபுறக் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள எட்டுத் திருக்கைகளுடன் விளங்கும் சிம்மவாகினி துர்க்கை
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
எட்டுத்திருக்கைகளுடன் பாய்ந்த நிலையில் உள்ள சிம்மத்தின் மேல் இடது காலை வைத்து வலதுகாலை ஊன்றி ஊர்த்துவஜானுவில் நின்றுள்ள தேவியின் மேலிரு கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியுள்ளாள். முன் கைகளில் வலது முன்கை தொடையில் (கடி முத்திரை) வைக்கப்பட்டுள்ளது. அரையாடை அணிந்துள்ள அன்னையின் கால்களில் வீரக்கழல்கள் காட்டப்பட்டுள்ளன. இடையாடை முன்புறம் முழங்கால் வரை வளைந்து தொங்குகின்றது. காதுகளில் வளையங்கள் காட்டப்பட்டுள்ளன. மார்பு கச்சை அணிந்துள்ளார். பல்லவச்சிற்பியின் கைவண்ணத்தில் எழில் தவழும் முகத்தினைப் பெற்றுள்ள தேவி வீரநங்கையாக நிற்கிறாள். இக்கோட்டத்தின் அருகே இருபுறமும் பகுக்கப்பட்ட இரு சிறு கோட்டங்களில் ஒன்றில் கணங்கள் வாழ்த்தொலிக்கிறது. மற்றொன்றில் தேவி வில்லொடு ஸ்வஸ்திக ஆசனத்தில் நிற்க, மேலே எருமை ஒன்று காட்டப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
துர்க்கை
சிற்பம்

துர்க்கை

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்