அகழாய்வு
பொருந்தல்
அகழாய்விடத்தின் பெயர் பொருந்தல்
ஊர் பொருந்தல்
வட்டம் பழநி
மாவட்டம் திண்டுக்கல்
அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட காலம் 2010
அகழாய்வு தொல்பொருட்கள் கருப்பு-சிவப்பு, கருப்பு மற்றும் சிவப்பு நிற மட்கல வகைகள், கற்பதுக்கைகள், சதுரமான கல்லாலான அமைப்பு, கல்வட்டங்கள், மட்கலக் கிண்ணங்கள், குடுவைகள், தட்டுகள், குவளைகள், மூடிகள், மட்பாண்டத் தாங்கிகள், சுடு
அகழாய்வு மேற்கொண்டநிறுவனம் பாண்டிசேரி பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் கா.ராஜன்
விளக்கம்

பொருந்தல் அகழாய்வு இயக்குநர் பாண்டிசேரி பல்கலைக்கழக பேராசிரியர், முனைவர் கா.ராஜன் அவர்கள் ஆவார். பொருந்தல் அகழாய்வில் கிடைத்த நெல் மாதிரி ஒன்று, அமெரிக்காவில் உள்ள பீட்டா ஆய்வு நிலையத்தில், அறிவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு (Accelerator Mass Spectrometry by the Beta Analytic Lab , USA ), அதன் காலம் கி.மு. 450 என கணிக்கப்பட்டுள்ளது. இதற்குமுன் இன்னொரு நெல் மாதிரி ஒன்று அதே ஆய்வு நிலையத்தில் காலக்கணிப்புக்கு உட்படுத்தப்பட்டு, அதன் காலம் கி.மு. 490 என கணித்தறியப்பட்டுள்ளது. இந்த இரண்டு நெல் மாதிரிகளுமே, பொருந்தல் அகழாய்வில் கிடைத்த, இரு வெவ்வேறு மட்பாண்டங்களிலிருந்து எடுக்கப்பட்டவைகளாகும். இந்தக்காலக் கணிப்புகளின்படி, தமிழ் பிராமியின் காலம் கி.மு. 5ம் நூற்றாண்டு என்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக தொல்லியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். மேலும் இந்தக்கண்டுபிடிப்பின் மூலம், தமிழ்பிராமி எழுத்து அசோகர் பிராமிக்கு இரு நூற்றாண்டுகள் முற்பட்டது (அசோகர் பிராமியின் காலம் கி.மு. 3ம் நூற்றாண்டு ஆகும்) என்பதோடு, அசோகர் பிராமியில் இருந்து தமிழ் பிராமி உருவாகவில்லை என்பதும் நிரூபிக்கப்படுகிறது என்கிறார் முனைவர் ராஜன் அவர்கள்.

ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ. சசிகலா
ஒளிப்படம்வழங்கியநிறுவனம் / நபர் மதுரை கோ. சசிகலா
குறிச்சொல்
குறிப்புதவிகள்
பொருந்தல்
அகழாய்வு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 10 Jul 2017
பார்வைகள் 29
பிடித்தவை 0

தொடர்புடைய அகழாய்வு