Back
சிற்பம்

யோக தட்சிணாமூர்த்தி

யோக தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின் பெயர் யோக தட்சிணாமூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் திருவாலீஸ்வரம்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன்
விளக்கம்
யோகபட்டத்துடன் அமர்ந்திருக்கும் தென்முகக்கடவுள்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
குமார சம்பவம் நிகழ்வதற்காக ஈசனின் மேல் தன் மலர்க்கணைகளை எய்த மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் எரித்து சாம்பலாக்கினார் ஈசன். அந்த ஈசனே காமதகனமூர்த்தி. பின் மன்மதனின் துணைவியாகிய இரதியின் வேண்டுகோளுக்கிரங்கி மதனை உயிர்ப்பிக்கிறார். ஆனால் இரதி கண்களுக்கு மட்டும் அவன் தென்படுவான் என்றும், பிறர் கண்களுக்கு புலனாகான் என்றும் கூறுகிறார். இக்காட்சியே சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது. யோக நிலையில் தட்சிணாமூர்த்தியாக அமர்ந்துள்ள காமாரி ஜடாபாரத்துடன் விளங்குகிறார். பின் கைகளில் அக்கமாலையும், கெண்டியும் கொண்டுள்ளார். இடையிலிருந்து வரும் யோகபட்டம் இடது முழங்காலோடு கட்டப்பட்டுள்ளது. மார்பில் முப்புரிநூலும், கழுத்தில் சரப்பளியும், வயிற்றில் உதரபந்தமும், கைகளில் தோள்வளை, கடகவளை, முன் வளைகள், கால்களில் அரியகம் (சிலம்பு போன்ற அணி) ஆகியன அணிந்துள்ளார். காமதகன மூர்த்தி நெற்றியில் மூன்றாவது கண்ணைக் கொண்டுள்ளார். நெற்றிக் கண்ணைத் திறந்தே மதனை எரிக்கிறார். காமாந்தகமூர்த்தியின் இடதுபுறம் மாரன் எரியும் நிலையில் காட்டப்பட்டுள்ளான். இடது புறம் இரதிதேவி இரு கைகூப்பி இறைவனை வணங்கி தன் இணையை மீட்டுத் தருமாறு இறைஞ்சுகிறாள்.
குறிப்புதவிகள்
யோக தட்சிணாமூர்த்தி
சிற்பம்

யோக தட்சிணாமூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்