Back
சிற்பம்

கங்காவிசர்ஜன மூர்த்தி

கங்காவிசர்ஜன மூர்த்தி
சிற்பத்தின் பெயர் கங்காவிசர்ஜன மூர்த்தி
சிற்பத்தின்அமைவிடம் கைலாசநாதர் கோயில்
ஊர் திருவாலீஸ்வரம்
வட்டம் அம்பாசமுத்திரம்
மாவட்டம் திருநெல்வேலி
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.10-ஆம் நூற்றாண்டு/முதலாம் இராஜராஜ சோழன்
விளக்கம்
கங்கைப் பெண்ணை சிவபெருமான் தலையில் தாங்கியதால் அவருடன் ஊடலுற்று திரும்பிய நிலையில் உள்ள உமையின் ஊடல் தீர்த்த பெருமானாக கங்காவிசர்ஜன மூர்த்தி
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
கங்காவிசர்ஜன மூர்த்தி கங்கையை தன் சடையிலிருந்து விடுவிக்கும் வடிவமாகும். தன் முன்னோர்களின் சாபம் நீங்க, பகீரதன் கங்கையை பூமிக்கு வர வேண்ட, கங்கையின் வெள்ளத்திலிருந்து பூமியைக் காக்க சிவனார் கங்கையை சடையில் தாங்குகிறார். பின் பகீரதனுக்காக அதனை விடுவிக்கிறார். கங்கைப் பெண்ணை சிவபெருமான் சடையில் தாங்கியதால் உமை சிவனோடு ஊடல் கொண்டாள். அந்த ஊடலை தணிக்கும் பொருட்டு பெருமான் தன் தலைவியின் முகவாய் பற்றி கெஞ்சி, கொஞ்சும் கோலமாகிய கங்காவிசர்ஜன மூர்த்தி திருவாலீஸ்வரம் கைலாசநாதர் கோயிலில் சிற்பமாகக் காட்டப்பட்டுள்ளார். இறைவனும் இறைவியும் வைஷ்ணவ நிலையில் ஒரு காலை ஊன்றி, ஒரு காலை தளர்வாக மடக்கியவாறு நின்றுள்ளனர். தேவியின் வலது கால் சிதைந்துள்ளது. அன்னையின் தலை ஊடலில் தலைவருக்கு மறுப்பு சொல்லும் பாணியாக சாய்ந்துள்ளது. தேவியின் வலது கை தொடையிலும், இடது கை மடக்கியவாறு தோளிலும் உள்ளன. தலைவர் ஜடாபாரமும், தலைவி கரண்ட மகுடமும் அணிந்துள்ளனர். கங்கையை விடுவிக்கும் பொருட்டு தன் புரி சடையை வலது பின் கையால் நீட்டியுள்ளார். வலது முன் கை அன்னையின் மோவாயை பற்றியுள்ளது. கங்கை பெருமானுக்கு மார்பில் முப்புரிநூலும், அரையாடையும், உமைக்கு மார்பில் சன்னவீரமும், முழு நீள ஆடையும் அமைந்துள்ளன. இருவருக்கும் கைகளில தோள்வளை, முன்வளைகள், கழுத்தணிகள் அழகு செய்கின்றன.
குறிப்புதவிகள்
கங்காவிசர்ஜன மூர்த்தி
சிற்பம்

கங்காவிசர்ஜன மூர்த்தி

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 14
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்