சிற்பம்

திருஞானசம்பந்தர்

திருஞானசம்பந்தர்
சிற்பத்தின் பெயர் திருஞானசம்பந்தர்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
63 நாயன்மார்களுள் ஒருவரும், தேவார மூவருள் முதல்வருமாகிய திருஞான சம்பந்தர்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
திருஞானசம்பந்தர் கி.பி. ஏழாம் நூற்றாண்டில், சீர்காழி என்னும் ஊரில், அந்தணர் மரபிலே, கவுணியர் குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையார் சிவபாதவிருதயர், தாயார் பகவதி அம்மையார். இவர் மூன்று வயதுக் குழந்தையாக இருந்தபோது, தந்தையாருடன் கோயிலுக்குச் சென்ற போது, அங்கே குழந்தையைக் கரையில் அமரவிட்டுக் குளிக்கச் சென்ற தந்தையார், சிறிது நேரம் நீருள் மூழ்கியிருந்த சமயம், தந்தையைக் காணாத குழந்தை அம்மையே அப்பா என்று கூவி அழுதது. அப்போது உமாதேவியார், சிவபெருமானுடன் இவர் முன் காட்சி கொடுத்து ஞானப்பாலூட்டினார். குளித்துவிட்டு வெளியே வந்த தந்தையார், பிள்ளையின் வாயிலிருந்து பால் வடிவதைக் கவனித்து, அது குறித்துக் கேட்கவே கோயிலிலுள்ள இறைவனைச் சுட்டிக்காட்டித் "தோடுடைய செவியன்" என்று தொடங்கும் தனது முதல் தேவாரத்தைத் திருஞானசம்பந்தர் பாடினார். பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் சமண சமயத்தை தழுவியிருந்த போது, அவனது துணைவியார் மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறையாரும் சம்பந்தரை மதுரைக்கு சைவம் தழைத்தோங்க செய்ய அழைத்தனர். அவ்வழைப்பின் பேரில் மதுரை சென்ற சம்பந்தர் சமணர்களோடு அனல்வாதம், புனல் வாதத்தில் ஈடுபட்டு அவர்களை வென்றார். தத்துவப் போரில் தோற்ற சமணர்களை கழுவேற்றியதாக வரலாறு கூறுகிறது. இச்சிற்பத்தில் திருஞானசம்பந்தருடன் சமண முனிவர்கள் வரிசையாகக் நிற்கின்றனர். இக்காட்சி சமணருக்கும் சம்பந்தருக்கும் நடந்த வாதப் போரை படம் பிடிக்கிறது. சம்பந்தர் சிறு பாலகனாய் உள்ளார். இடையில் தொங்கல்களுடன் அமைந்த மேகலையும், கால்களில் பாலகர்களுக்குரிய கிண்கிணிச் சதங்கையும், கைகளில் வளைகளும், கழுத்தணிகளும், காதுகளில் குண்டலங்களும், இடையில் அரையாடையும் அணிந்துள்ளார். அவர் அருகில் நிற்பவர் கைகளைக் கூப்பி வணங்கிய நிலையில் நிற்கின்றார்.
குறிப்புதவிகள்
திருஞானசம்பந்தர்
சிற்பம்

திருஞானசம்பந்தர்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 18
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்