Back
சிற்பம்

புகழ்ச் சோழர் நாயனார்

புகழ்ச் சோழர் நாயனார்
சிற்பத்தின் பெயர் புகழ்ச் சோழர் நாயனார்
சிற்பத்தின்அமைவிடம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில்
ஊர் தாராசுரம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன்
விளக்கம்
பொழிற் கருவூர்த் துஞ்சிய புகழ் சோழர் நாயனார்
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
குறிச்சொல்
சுருக்கம்
புகழ்ச் சோழர் கருவூரில் இருந்து ஆட்சி செய்து வந்த சோழ மன்னராவார். சிவத்தலங்களில் பூசனைகள் நடத்தியும், சிவ நெறி தவறாது ஆட்சி நடத்தியும் வந்தவர். கருவூரில் சிவகாமியாண்டார் என்பவர் சிவபூசைக்கு கொணர்ந்த பூக்குடலை பறித்த யானையினையும், அதன் பாகனையும் எறிந்து கொன்ற எறிபத்தர் என்னும் சிவனடியார் முன் தன் உடைவாளினை நீட்டி, இச்செயலுக்கு அரசனாகிய தாமே பொறுப்பு என்று கருதி தன்னைக் கொல்ல வேண்டும் கூறினார். அவரோடு முரண்பட்டு, திறை செலுத்த மறுத்த மற்ற சிற்றரசர்களை போரிட்டு வெல்லுங்காலையில் பகைவர்களின் வெட்டி வீழ்த்தப்பட்ட தலைகளில் ஒன்று சடைமுடி தரித்திருப்பதைக் கண்டு நடுங்கி சிவனடியார்க்கு தீங்கிழைத்த காரணத்தால் எரி புகுந்து, இன்னுயிர் நீத்து சிவனடி சேர்ந்தார். இச்சிற்பக் காட்சியில் புகழ்ச் சோழர் அரசவையின் அத்தாணி மண்டபத்தில் வீற்றிருக்கிறார். அவருடைய அமைச்சர் வணங்கி நிற்கிறார். அருகில் நிற்கும் மற்றவர்கள் புகழ்ச் சோழர்க்கு பணிந்து கப்பம் கட்டும் சீறூர் மன்னர்களாவா்.
குறிப்புதவிகள்
புகழ்ச் சோழர் நாயனார்
சிற்பம்

புகழ்ச் சோழர் நாயனார்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 08 May 2017
பார்வைகள் 16
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்