சிற்பம்
புத்தர்
புத்தர்
சிற்பத்தின் பெயர் | புத்தர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில் |
ஊர் | தாராசுரம் |
வட்டம் | கும்பகோணம் |
மாவட்டம் | தஞ்சாவூர் |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | பௌத்தம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.12-ஆம் நூற்றாண்டு/இரண்டாம் இராஜராஜன் |
விளக்கம்
மனிதராகப் பிறந்து தெய்வமாக உயர்ந்த புத்தர் பிரான்
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அற நெறிகளை மக்களுக்கு எடுத்துரைத்த புத்தர் தாமரைப்பீடத்தின் மீது அமர்ந்துள்ளார். அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்துள்ள புத்த பகவான் சிரஸ்திரக (சுருள் வடிவான) முடியலங்காரத்தைக் கொண்டுள்ளார். தர்ம சக்கரத்தை இயக்கும் பாவனையாக அற விளக்கம் கூறும் அமைதி கொண்ட முத்திரை (தர்ம சக்கர முத்திரை)யைக் கொண்டுள்ளார். இம்முத்திரைக்கு அறவாழிக்கை என்று பெயர். மார்பில் உத்தரீயம் எனப்படும் மேலாடை செல்கிறது. நீள் காதுகள் ஞானத்தின் வடிவாய்த் திகழ்கின்றன. புன்னகை தவழும் முகத்துடன் அமைதியின் வடிவாய் கௌதமர் விளங்குகிறார்.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
புத்தர்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 16 |
பிடித்தவை | 0 |