சிற்பம்

முருகன்

முருகன்
சிற்பத்தின் பெயர் முருகன்
சிற்பத்தின்அமைவிடம் வேலூர் அரசு அருங்காட்சியகம்
ஊர் வேலூர்
வட்டம் வேலூர்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் வேலூர் அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை சைவம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.20-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
முருகன் மயில் வாகனத்துடன் நின்ற நிலையில் காணப்படுகின்றார். கண்ணிமாலையும் கரண்டமகுடமும் தலையலங்காரமாய் விளங்க, கழுத்தணிகளில் கண்டசரம், சரப்பளி துலங்க, மார்பில் சன்னவீரம், வயிற்றில் உதரபந்தம் ஆகியன பொலிந்திட, வலது கையை காக்கும் கரமாகவும், இடது கையை இடது தொடையில் வைத்தவாறும் நிற்கிறார். அண்ணலின் பின்னால் மயில் நீண்ட தோகையோடு காட்டப்பட்டுள்ளது.
ஒளிப்படம்எடுத்தவர் மதுரை கோ.சசிகலா
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த முருகன் சிற்பம் வேலூர் வட்டம், சத்தியமங்கலம் என்ற ஊரில் கண்டெடுக்கப்பட்டது. தற்காலத்திய சிற்பக் கலைஞர்களின் கலைப்பாணியை இச்சிற்பம் காட்டி நிற்கிறது.
குறிப்புதவிகள்
முருகன்
சிற்பம்

முருகன்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்