புலிக்குத்திப்பட்டான் கல்
புலிக்குத்திப்பட்டான் கல்
சிற்பத்தின் பெயர் | புலிக்குத்திப்பட்டான் கல் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |
ஊர் | கரட்டடிபாளையம் |
வட்டம் | கோபிசெட்டிபாளையம் |
மாவட்டம் | ஈரோடு |
அமைவிடத்தின் பெயர் | கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள கரட்டடிப்பட்டி என்னும் ஊரில் உள்ள கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் எதிரில் திறந்த வெளியில் சில நடுகற்கள் காணப்படுகின்றன. இந்த நடுகற்கள் விசயநகரர்-நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை. அதில் ஒரு நடுகல்லான இந்த நடுகல் கொடிய புலியைக் குத்திக் கொன்று தானும் இறந்து பட்ட வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நினைவுக் கல்லாகும். இக்கல் புலிக்குத்திப் பட்டான் கல் என்று அழைக்கப்படும். இந்த நடுகல்லில் அவனோடு சேர்ந்து உயிர் துறந்த அவனது மனைவியும் சிறப்பிக்கப்பட்டுள்ளாள். செவ்வக வடிவ பலகைக்கல்லில் புலியைக் குத்திக் கொன்று தானும் பட்ட வீரனின் வீரச்செயலும், வீரனை சுவர்க்கத்திற்கு தேவமங்கையர் அழைத்துச் செல்லும் காட்சியும், மேலுலகத்தில் அவ்வீரன் சிவபூசை செய்து சிவபதவி அடையும் நிலையுமாக மூன்று நிலைகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இச்சிற்பத் தொகுதியில் வீரன் புலியுடன் சண்டையிடும் காட்சிப்பகுதி இக்கல்லில் உடைந்து போயிற்று. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
“புலிக்குத்திப்பட்டான் கல்“ என்று கி.பி.6-7-ஆம் நூற்றாண்டுகளில் நடுகற்களில் உள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் புலியைக் கொன்று தானும் இறந்து பட்ட வீரனுக்கு எடுக்கப்பட்ட வீரக்கல்லானது பிற்காலத்தில் மூன்று வகையான காட்சிப் படிமங்களோடு காட்டப்படுவது மரபாக மாறியது. பலகைக் கல்லில் வடிக்கப்பட்டுள்ள இச்சிற்பத் தொகுதியில் முதல் நிலையில் வீரன் புலியைக் கொல்லும் காட்சி உடைந்து விட்டது. இரண்டாம் நிலையில் அவனின் வீரச் செயலுக்காக தேவமங்கையர் அவனை கைபிடித்து மேலோர் உலகம் அழைத்துச் செல்லுதலும், மூன்றாம் நிலையில் அவன் உயர்பதவி பெற்று சிவபூசையில் ஈடுபடலுமாய் இக்காட்சிகள் வடிக்கப்பட்டுள்ளமை சிறப்பு. |
|
ஆவண இருப்பிடம் | கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில் |
புலிக்குத்திப்பட்டான் கல்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 22 May 2020 |
பார்வைகள் | 14 |
பிடித்தவை | 0 |