சிற்பம்
அப்சரஸ்
அப்சரஸ்
சிற்பத்தின் பெயர் | அப்சரஸ் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கழுகு மலை வெட்டுவான் கோயில் |
ஊர் | கழுகு மலை |
வட்டம் | கோவில்பட்டி |
மாவட்டம் | தூத்துக்குடி |
அமைவிடத்தின் பெயர் | கருவறை விமானம் மேற்குபுற தேவகோட்டம் |
சிற்பத்தின் வகை | சைவம் |
ஆக்கப்பொருள் | கருங்கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-ஆம் நூற்றாண்டு/முற்காலப் பாண்டியர் |
விளக்கம்
எழில் மிகு தோற்றத்துடன் நிற்கும் ஏந்திழையாள் அப்சரஸ் எனப்படும் தேவ மங்கை
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | காந்திராஜன் க.த. |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
அப்ஜம்’ என்றால் தாமரை; 'சரஸ்’ என்றால் நீர்நிலை. இரண்டு சொல்லும் சேர்ந்து அப்ஜசரஸ்- அப்சரஸ் ஆனது. தாமரை மலர் நிறைந்த குளம் போல மனதுக்கு மகிழ்ச்சியும் இதமும் தரும் தேவ மங்கையர் என்று பொருளாகும். இவர்கள் அரம்பையர் எனப்படுவர். பாற்கடலில் அறுபதாயிரம் (60,000) அரம்பையர்கள் தோன்றினார்கள். அவர்கள் வசிப்பதற்காக தனித்த உலகம் வேண்டியும், என்றுமே இளமை குன்றாக் கன்னிகளாகவும் இருக்க வேண்டி சிவபெருமானை நோக்கி தவமிருந்தார்கள். அவர்களி்ன் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான் அறுபதாயிரம் தேவ கன்னிகள் வாழ அப்சரஸ் லோகம் என்பதை உருவாக்கி தந்தார். அரம்பையர்கள் சிவபூஜையை மேற்கொள்கின்றவர்கள். உமையவளுக்கு துணையாக இருக்கின்றவர்கள். பேரரழகு வாய்ந்தவர்கள். பலவித இசையை யாழில் மீ்ட்டுகின்ற திறனும், மயக்கும் குரலில் பாடலை இயற்றுபவர்களாகவும், நடனக் கலையில் வல்லமை படைத்தவர்களாகவும் அறியப்படுகிறார்கள். அரம்பையர்களை வழிபட்டால் இளமையும், செல்வமும், மகிழ்ச்சியும் கிடைக்குமென புராணங்கள் கூறுகின்றன. இந்த வழிபாட்டு முறை பழங்காலத்தில் இருந்துள்ளது. தற்போது இந்தியாவின் வடக்கு பகுதியில் ஸ்ரீலட்சுமி பூஜையில் அரம்பையர்களை வழிபடும் வழக்கமும் உள்ளது. கழுகு மலை வெட்டுவான் கோயிலில் உள்ள தேவ மங்கையின் சிற்பம் தொங்கும் இடையாடையை வலது கையில் பிடித்தவாறு கையை தாங்கியின் மீது வைத்து, இடது கையில் மலரைக் கொண்டுள்ளாள். கழுத்தில் மணியாலான கண்டிகையும், சரப்பளியும் அணிந்துள்ளார். தோள்களில் வாகுமாலை காட்டப்பட்டுள்ளது. காதுகளில் பத்ர குண்டலங்களும், கைகளில் தோள் வளை, இரட்டை முன்வளைகள் ஆகியனவும், இடையில் முகப்புடன் கூடிய அரைப்பட்டிகையும் அணிந்துள்ளார். அம்ம! அழகிதே என வியக்கும் படியாக தேவமங்கையின் எழில் கொஞ்சும் தோற்றம் அமைந்துள்ளது. முகத்தில் மெல்லிய புன்னகையுடன் இடை வரை மட்டுமே காட்டப்பட்டுள்ள இச்சிற்பத்தினை நோக்கும் பொழுது தற்காலத்தில் படப்பிடிப்புக் கூடத்தில் நிழற்படத்திற்கு பெண்கள் நிற்கும் பாணி தெரிகின்றது.
|
|
குறிப்புதவிகள்
|
சிற்பம்
அப்சரஸ்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 08 May 2017 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |