சிற்பம்
சிற்பத்தின் பெயர்
சிற்பத்தின்அமைவிடம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில்
ஊர் கரட்டடிபாளையம்
வட்டம் கோபிசெட்டிபாளையம்
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில்
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

          பலகை கல்லின் மேற்புறம் அலங்கார வளைவு போன்றும், அடிப்பாகம் பீடம் போன்றும் செதுக்கப்பட்டு, நடுவில் புலியைக் குத்தி தானும் பட்ட வீரனும், பாய்ந்து அவனைத் தாக்கவரும் புலியும் காட்டப்பட்டுள்ளனர். பாய்ந்து வரும் புலியை தன்னுடைய நீண்ட ஈட்டியால் தாக்கும் நிலையில் வீரன் சிற்பத்தில் காட்டப்பட்டுள்ளான். இடையில் குறுவாள் தொங்குகிறது. அரையாடை உடுத்தி, கைகளில் வளை, கால்களில் வீரக்கழல்கள் அணிந்துள்ள இவ்வீரனின் நீள்செவிகளில் குண்டலங்கள் விளங்குகின்றன. தலையில் தலைப்பாகை அணி செய்கிறது. அவன் எதிரே பாயும் புலி தன் முன்னங்கால்களைத் தூக்கி வீரனைத் தாக்குகிற காட்சியும், இடது கையால் அப்புலியை தடுத்தவாறு, வலது கை ஈட்டியால் குத்தும் வீரனின் வலிமையும் நேர்த்தியாக சிற்பமாக்கப்பட்டுள்ளது.

ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

         ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள கரட்ட்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கோபி கலை மற்றும் கல்லூரியின் எதிரில் அக்கல்லூரியின் தொல்லியல் சேகரிப்புகளாக ஐந்து நடுகற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான இந்த நடுகல் வீரன் ஒருவன் புலியைக் குத்தி கொன்று, அப்பூசலில் தானும் இறந்துபட்டமையினால் அவன் நினைவாக எடுப்பிக்கப்பட்ட வீரக்கல்லாகும். இக்கல் புலிக்குத்திப்பட்டான் கல் என்று அழைக்கப்படுகிறது. இந்நடுகல்லில் கல்வெட்டு மிகவும் சிதைந்துவிட்டது.

ஆவண இருப்பிடம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 22 May 2020
பார்வைகள் 10
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்