சிற்பம்
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் நடுகல் வீரன்
சிற்பத்தின்அமைவிடம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில்
ஊர் கரட்டடிபாளையம்
வட்டம் கோபிசெட்டிபாளையம்
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில்
சிற்பத்தின் வகை நடுகல் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         நடுகல் வீரன் இளையனாகத்தோற்றமளிக்கிறான். நேராக நின்றுள்ள வீரனின் வலது கை நீண்ட வாளையும், இடது கை கேடயத்தையும் பிடித்துள்ளன. தலையணியாக பின்புறம் பெரிய கொண்டை காட்டப்பட்டுள்ளது. நீள் செவிகளில் பத்ரகுண்டலங்கள் விளங்குகின்றன. அரையாடை அணிந்துள்ள இவ்வீரனின் இடையில் குறுவாள் தொங்குகிறது. மார்பின் இருபுறமும் குறுக்காக ஓடும் வீரச்சங்கிலி முருகனையொத்த அவனது வீரத்தைக் காட்டுவதாக உள்ளது. வீரனது கால்களின் அருகே இரு நாய்கள் பக்கத்திற்கொன்றாக சுருண்ட வாலுடன் நிற்கின்றன. இவை வீரனோடு துணைக்குச் செல்லுபவையாகலாம்.

ஒளிப்படம்எடுத்தவர் திரு.வேலுதரன்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்

         ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள கரட்ட்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள கோபி கலை மற்றும் கல்லூரியின் எதிரில் அக்கல்லூரியின் தொல்லியல் சேகரிப்புகளாக ஐந்து நடுகற்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான இந்த நடுகல் வீரன் ஒருவன் வாள் மற்றும் கேடயத்தை கைகளில் பிடித்தபடி நிற்கிறான். அவன் கால்களின் இருபுறமும் கீழே அவனின் வேட்டை நாய்கள் காட்டப்பட்டுள்ளன.

ஆவண இருப்பிடம் கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி எதிரில்
நடுகல் வீரன்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 22 May 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்