சிற்பம்

புலிக்குத்திப்பட்டான் கல்
சிற்பத்தின் பெயர் | புலிக்குத்திப்பட்டான் கல் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | காங்கேயம் புலிக்குத்திப்பட்டான் கல் |
ஊர் | காங்கேயம் |
வட்டம் | காங்கேயம் |
மாவட்டம் | திருப்பூர் |
அமைவிடத்தின் பெயர் | காங்கேயம் ஊர்ப்புறப்பகுதி |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.8-9 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
புலிக்குத்திப்பட்டான் நடுகல் பலகைக் கல் வடிவில் புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. பாய்ந்து கடித்துத் தாக்க வருகின்ற புலியை தன் இடது கையால் தடுத்தவாறு, புலியைக் கொல்வதற்கு தன் வலது கையில் உள்ள நீண்ட ஈட்டியைக் கொண்டு புலியின் மார்பில் குத்தி கொல்கிறான்.ஒரு இயங்கு நிலைத் தன்மையை இப்புடைப்புச் சிற்பம் நமக்குக் காட்டுகிறது. இடையில் இறுக்கிக் கட்டப்பட்டுள்ள முடிச்சுகளுடன் கூடிய அரையாடை அணிந்துள்ள இந்நடுகல் வீரனின் முகம் தெளிவாகத் தெரியவில்லை. ஓடி வந்து பாய்ந்து தாக்குதல் காட்சி இப்புடைப்புச் சிற்பத்தில் வீரனின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.
|
|
ஒளிப்படம்எடுத்தவர் | திரு.வேலுதரன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் அமைந்துள்ள இந்த புலிக்குத்திப்பட்டான் கல் கி.பி.8-9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாகும்.பலகைக் கல்லில் புடைப்புச் சிற்பமாக புலியை தன் கூரிய முனையுடைய ஈட்டியால் குத்திக் கொல்லும் வீரனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. புலியுடன் போரிட்டு இறந்த வீரனின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட இந்த வீரக்கல் புலிக்குத்திப்பட்டான் கல் என்று பெயரிட்டு அழைக்கப்படுகிறது. இந்த புலிக்குத்திபட்டான் நடுகல் தற்போது வரை வழிபாட்டில் உள்ளது.
|
|
குறிப்புதவிகள்
ஆசனபதம் (சிற்பநூல்), உக்கிரபீடம் (சிற்பநூல்), உபபீடகம் (சிற்பநூல்), தண்டிலம் (சிற்பநூல்), பரமசாயிகம் (சிற்பநூல்), மகாபீடபதம் (சிற்பநூல்), மண்டூகம் (சிற்பநூல்), மயமதம், மானசாரம், வாசுத்து சூத்திர உபநிடதம், ஸ்ரீதத்வநிதி, அனுபோக பிரசன்ன ஆரூடம், அருட் கொடி சிற்பசாஸ்திரக் கண்ணாடி, காக்கையர் சிற்பம் புசண்டர் சல்லியம், சர்வார்த்த சிற்ப சிந்தாமணி, சிற்பச் செந்நூல், வை. கணபதி ஸ்தபதி, மாமல்லபுரம் கலைக் கல்லூரி, மாமல்லபுரம், T. A. Gopinatha Rao, Elements of Hindu iconography, Motilal Banarsidass Publisher, 1993 .
|
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 Mar 2020 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |