Back
சிற்பம்

பெரிய கிழங்கன் நடுகல்

பெரிய கிழங்கன் நடுகல்
சிற்பத்தின் பெயர் பெரிய கிழங்கன் நடுகல்
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை நடுகல் புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
பெரிய கிழங்கன் நடுகல் என்றழைக்கப்படும் இந்நடுகல் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. கொங்கு நாட்டுப் போர் ஒன்றில் வீரமரணம் எய்திய வேட்டுவ குலத்தலைவனான பெரிய கிழங்கன் என்னும் வீரனுக்கு எடுப்பிக்கப்பட்ட நடுகல். கிழங்க வேட்டுவர் என்பது வேட்டுவர்கள் குலத்தில் ஒரு பிரிவாகும். அக்குலத்தின் தலைவனான பெரியகிழங்கன் தலையநல்லூர் என்னுமிடத்தில் வீரமரணம் அடைந்ததை இந்நடுகல் கல்வெட்டு குறிப்பிடுகிறது. “தலைநல்லூரில் கிழங்க வேட்டுவரில் கிழங்கந் பெரிய கிழங்கன்“ என்பது கல்வெட்டு வாசகம். பெரியகிழங்கன் வேட்டுவர்க்குரிய தோற்றத்துடன் வீரமுடன் காணப்படுகிறார். இடையில் குறுவாள் உள்ளது. கைகளில் ஆயுதங்கள் தாங்கியுள்ளார். நீள் செவிகளும், விரிந்த மார்புமாய், முடிந்த கொண்டையுமாய் வீர்ர விளங்குகிறார்.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கொங்கு நாட்டுப் போர் ஒன்றில் வீரமரணம் எய்திய வேட்டுவகுலத் தலைவனின் நடுகல் இது. சிவகிரியின் பழம்பெயர் தலையநல்லூர் என்பதும், கிழங்க வேட்டுவர் என்ற பிரிவைச் சேர்ந்த பெரிய கிழங்கன் என்பது தலைவர் பெயர் என்பதும் கல்வெட்டால் அறியப்படுகிறது.
குறிப்புதவிகள்
பெரிய கிழங்கன் நடுகல்
சிற்பம்

பெரிய கிழங்கன் நடுகல்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 15
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்