Back
சிற்பம்

பருவாச்சி சூலக்கற்கள்

பருவாச்சி சூலக்கற்கள்
சிற்பத்தின் பெயர் பருவாச்சி சூலக்கற்கள்
சிற்பத்தின்அமைவிடம் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
ஊர் ஈரோடு
வட்டம் ஈரோடு
மாவட்டம் ஈரோடு
அமைவிடத்தின் பெயர் ஈரோடு அரசு அருங்காட்சியகம்
சிற்பத்தின் வகை புடைப்புச் சிற்பம்
ஆக்கப்பொருள் கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.14-ஆம் நூற்றாண்டு
விளக்கம்
பருவாச்சியில் கிடைத்த அழகிய சூலக்கல்லும், இரண்டு துணைக் கற்களும் அங்குள்ள சிவன் கோயிலுக்கு கொடையளிக்கப்பட்ட நிலத்தில் இருந்தன. பருவாச்சியின் பெயர் அகளங்கநல்லூர் என இந்த சூலக்கல்லின் அடியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சூலக்கல் நீண்டுயர்ந்த கல்லாக அமைந்துள்ளது. முத்தலைச் சூலம் உச்சியிற் பிறையுடன் புடைப்புச் சிற்பமாக காணப்படுகிறது. சூலம் ஒரு பீடத்தின் மீது காட்டப்பட்டுள்ளது. அதனடியில் கல்வெட்டு காணப்படுகின்றது. சூலத்தின் இருபுறமும் வேலிகள் காட்டப்பட்டுள்ளமை இங்கு நோக்கத்தக்கது. இச்சூலக்கல்லைத் தவிர மற்றிரண்டு சிறிய அளவிலான, கல்வெட்டு இல்லாத சூலக்கற்கள் இருபுறமும் உள்ளன.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் உள்ள பருவாச்சியில் கி.பி.14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சூலக்கற்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த சூலக்கற்கள் கிடைத்த இடத்தின் பெயரால் பருவாச்சி சூலக்கற்கள் என பெயரிடப்பட்டு ஈரோடு அரசு அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
குறிப்புதவிகள்
பருவாச்சி சூலக்கற்கள்
சிற்பம்

பருவாச்சி சூலக்கற்கள்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்