Back
சிற்பம்
புடைப்பு குறுஞ்சிற்பங்கள்
சிற்பத்தின் பெயர் புடைப்பு குறுஞ்சிற்பங்கள்
சிற்பத்தின்அமைவிடம் திரிபுவனம் கம்பஹரேசுவரர் கோயில்
ஊர் திரிபுவனம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் திரிபுவனம் கம்பஹரேசுவரர் கோயில்
சிற்பத்தின் வகை வாழ்வியல்
ஆக்கப்பொருள் கருங்கல்
காலம்/ஆட்சியாளர் கி.பி.11-ஆம் நூற்றாண்டு / பிற்காலச் சோழர்
விளக்கம்
திரிபுவனம் கம்பஹரேசுவரர் கோயில் முதன்மை கோபுரத்தின் நுழைவாயிலின் உட்புறம் இருபுறமும் உள்ள தாங்குநிலைக் கால்கள் போன்ற அமைப்பில் வரிசையாக பெண் வடிவங்களின் குறுஞ்சிற்பங்கள் காட்டப்பட்டுள்ளன. கோட்டம் போன்ற அமைப்பின் நடுவே பெண் உருவங்கள் ஆடுதல், தலை பின்னுதல், குழலூதுதல், மகவை கருவில் சுமத்தல், குழவியை இடையில் சுமத்தல், வீரநிலை, கொடிநிலை உள்ளிட்ட பெண்மையின் பல்திறன்களை சிற்பங்களாக பதிவிட்டுள்ளமை நோக்கத்தக்கது.
ஒளிப்படம்எடுத்தவர் காந்திராஜன் க.த.
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் தமிழ் இணையக் கல்விக் கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
கோபுர நுழைவாயிலின் நிலையில் கொடிபோன்ற அமைப்பில் பல்வேறு உருவங்கள், கடவுளர் வடிவங்கள், விலங்குகள், பறவைகள், ஆடற்கரணங்கள் ஆகிய காட்சிகளை குறுஞ்சிற்பங்களாக அமைப்பர். அவ்வகையில் இக்கோயிலின் நுழைவாயிலின் நிலைப்படியில் அமைக்கப்பட்டுள்ள இக்குறுஞ்சிற்பத் தொகுப்பு மகளிரின் பல்வேறு செயல்பாடுகளையும், கலைத்திறன்களையும், அழகியல் உணர்வுகளையும் காட்டுவதாக வடிக்கப்பட்டமை சிறப்பு.
குறிப்புதவிகள்
புடைப்பு குறுஞ்சிற்பங்கள்
சிற்பம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 06 Feb 2020
பார்வைகள் 13
பிடித்தவை 0

தொடர்புடைய சிற்பம்