
நடுகல் வீரன்
சிற்பத்தின் பெயர் | நடுகல் வீரன் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | ஆரியபட்டி கல்யாணகருப்பசாமி கோவில் |
ஊர் | ஆரியபட்டி |
வட்டம் | உசிலம்பட்டி |
மாவட்டம் | மதுரை |
அமைவிடத்தின் பெயர் | ஆரியபட்டி கல்யாணகருப்பசாமி கோவில் |
சிற்பத்தின் வகை | நடுகல் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி. 17-ஆம் நூற்றாண்டு |
அளவுகள் / எடை | சுமார் 4 அடி உயரம் மற்றும் 3 அடி அகலம் |
விளக்கம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு அருகே சுமார் 8 கி.மீ கிழக்கில் அமைந்துள்ள கிராமம் ஆரியபட்டி. இவ்வூரின் தென் பகுதியில் அமைந்துள்ளது கல்யாணகருப்பசாமி கோவில். இக்கோவில், இங்குள்ள பூர்வகுடிகளின் ஒரு கூட்டத்திற்கு குலதெய்வ கோவிலாகும். கோவிலின் முன் வாசல் அருகே இரண்டு நடுகற்கள் வைக்கப்பட்டுள்ளது. அவை சுமார் 4 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டுள்ளது. சிலை 1 : வீரன் ஒருவன் இரண்டு கால் பாய்ச்சலில் இருக்கும் குதிரையின் மேல் அமர்ந்து கொண்டு வலது கையில் வாளை ஓங்கிய நிலையிலும் இடது கையில் கயிற்றைப் பிடித்துக் கொண்டும் காட்டப்பட்டுள்ளான். குதிரையின் பின்புறத்தில் நின்று ஒருவன் நீண்ட குடையினை குதிரையின் மேல் அமர்ந்துள்ளவனுக்கு பிடித்துக் கொண்டு இருக்கின்றான். ஆக குதிரை மேல் அமர்ந்துள்ளவன் சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ளவராகவோ, இனக்குழு தலைவனாகவோ இருக்கக்கூடும். அதுபோல குதிரை வீரனுக்கு இருபுறமும் இரண்டு பெண்கள் கையில் மலர் மற்றும் குடுவையுடன் காட்டப்பட்டுள்ளனர். குதிரை வீரன் முறுக்கிய மீசையுடன் தாடி வளித்து நீண்ட காதுகளுடன் கொண்டையுடன் காணப்படுகிறான். உருவங்களின் தோற்றம், சிற்ப அமைவு, உடை, அணிகலன்கள் போன்றவற்றின் அடிப்படையில் இவை சுமார் 300 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் எனக்கருதப்படுகிறது. சிலை 2 : இந்த சிலையில் வீரன் ஒருவன் முந்தைய சிற்பத்தில் உள்ளது போல பாய்ச்சலில் உள்ள குதிரையின் மேலே வலது கையில் வாளுடன் இடது கையில் கயிற்றைப் பிடித்துக் கொண்டிருப்பது போல காட்டப்பட்டுள்ளது. அவனுக்கு கீழே நீண்ட கம்புடன் கூடிய குடையினை ஏந்தியவாறு சிறிய உருவத்தில் இருக்கும் ஒருவன் பிடித்துக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அருகே பெண் ஒருவர் வலது கையில் மலரும் இடது கையில் குடமும் வைத்துள்ளார். உருவ அமைப்பில் இவ்விரண்டு சிற்பத் தொகுதிகளும் ஒரே காலகட்டங்களில் உருவான சிற்பங்களாகத் தெரியவருகிறது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த. காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
மதுரையிலிருந்து மேற்கு வழியாக சேர நாட்டிற்கு செல்லும் சாலையில் உசிலம்பட்டிக்கு அருகே அமைந்துள்ள இவ்விடத்தில் இரண்டு தனித்தனி நடுகற்கள் எழுப்பப்பட்டுள்ளது. இவை சுமார் 400 ஆண்டுகள் பழமையானவைகளாக இருக்கக்கூடும். உள் நாட்டில் நடந்த பூசல்களினால் ஏற்பட்ட மோதலில் பலியானவர்களுக்கு அவர்களது வாரீசுகள் கல் எடுத்தது. |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 06 Sep 2022 |
பார்வைகள் | 48 |
பிடித்தவை | 0 |