கல்வெட்டு
பெ.கன்னியம்பட்டி உரல்
பெ.கன்னியம்பட்டி உரல்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பெ.கன்னியம்பட்டி உரல் |
|---|---|
| ஊர் | பெ.கன்னியம்பட்டி |
| வட்டம் | உசிலம்பட்டி |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | ஊரிலுள்ள உரல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
பெ. கன்னியம்பட்டி காத்தாண்டம்மன் கோயிலின் வடக்கே பாறையில் செதுக்கிய கல்வெட்டில் மூன்று வரிகள் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. இது 17--18ம் நுாற்றாண்டை சேர்ந்தது. சிவபெருமானுக்காக செயலாக அர்ச்சுன செட்டி என்பவர் உரலை மக்கள் பயன்பாட்டிற்காக கொடையளித்தார் என்ற செய்தி உள்ளது. பாறை அருகேயுள்ள உரல் குழி மூடப்பட்டு எழுத்து மட்டும் காணப்படுகிறது. பெ.கன்னியம்பட்டியில் காணப்படும் இக்கல்வெட்டு 3 வரிகளில் தமிழ் எழுத்தில் உள்ளது. கி.பி.17-18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இக்கல்வெட்டின் எழுத்தமைதியைக் கொண்டு இதன் காலத்தைக் கணிக்கலாம். இறைவன் சிவபெருமானுக்கான செயலாக அர்ச்சுன செட்டி என்பவர் இந்த உரலை கொடையளித்துள்ளார் என்ற செய்தியை இக்கல்வெட்டின் மூலம் அறிய முடிகிறது. “சிவனார்“ என்ற சொல் வட்டார வழக்குப்படி “சிவன்னாரு“ என்பதாகும். சிவன்னாரு என்ற அச்சொல்லில் இங்கு வல்லின றகரம் பயன்படுத்தப்பட்டு “சிவன்னாறு“ என்று எழுதியுள்ளமை தெரிகின்றது.
|
|
கல்வெட்டு
பெ.கன்னியம்பட்டி உரல்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 111 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |