கல்வெட்டு
ஜம்பை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் ஜம்பை
ஊர் ஜம்பை
வட்டம் திருக்கோயிலூர்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் ஆளுருட்டி மலை-தாசிமடம்
குறிச்சொல்
சுருக்கம்
இக்கல்வெட்டின் சிறப்பு சங்க இலக்கியங்கள் குறிக்கும் மன்னர்களுள், முடியுடை மூவேந்தர் தவிர அடுத்த நிலையில் இருந்த குறுநில மன்னர்களுள் ஒருவனான அதியமான் மரபினன் பெயரைத் தாங்கி இருப்பதாகும். அதிலும் அவன் பெயருக்கு முன்னே உள்ள ‘சதியபுதோ’ என்ற சொல் மேலும் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது. கல்வெட்டின் முதற் சொல்லான இது, மெளரியப் பேரரசன் அசோகனின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் இடம் பெறுகிறது. சபாஸ்கார்கி, கால்சி, ஜெளகதா, கிர்நார் ஆகிய நான்கு இடங்களில் இக்கல்வெட்டின் வாசகம் ஒன்று போலப் பொறிக்கப்பட்டுள்ளது. வடமேற்கு இந்தியாவில் உள்ள சபாஸ்கார்கியில் ஆரியோபாலி வகையிலும், பிற மூன்று இடங்களிலும் இந்தோ - பாலி வகையிலும் இவை எழுதப்பட்டுள்ளன. எனவே முன்னதில் மட்டும் ’சத்யபுத்ர’ என்று சமஸ்கிருத ஒலியமைப்பிலும், பிறவற்றில் ‘சதியபுத' என்று பிராகிருத ஒலியமைப்பிலும் இச்சொல் எழுதப்பட்டுள்ளது. இப்பிராகிருதச் சொல்லின் மூலவடிவம் தமிழில் உள்ள 'அதியமான்’ என்பதே ஆகும். இதனை சேஷ ஐயர் முதலில் மொழியியல் அடிப்படையில் ஒப்புமைப்படுத்திக் கூறினார். பின்னர் பர்ரோ, அதியமானின் தொல் திராவிட வடிவம் சதியமான் என்பதே என்றும் அதுவே தமிழில் அதியமான் என்று மாறியது என்றும், தொல் திராவிட வடிவே, பிராகிருதத்தில் இடம்பெற்றுள்ளது என்றும் ஆராய்ந்தெழுதினார். இவ்வாய்வுகள் அனைத்திற்கும் நேரடிச் சான்றாக இக்கல்வெட்டுக் கண்டுபிடிப்பும் அதில் அதியந்‘சதியபுதோ’ என்ற இரு சொற்களும் இணைந்து இடம்பெற்றிருந்ததும் அமைந்தது. இதன் மூலம் மெளரியர் கல்வெட்டு குறிக்கும் ‘சதியபுதோ’ அதியமான்களே என்பது உறுதியாயிற்று. அதியன் நெடுமான் அஞ்சி என்ற அடுத்த மூன்று சொற்களில் அதியன் என்பது குலப்பெயர் ஆகும். நெடுமான் என்பது அஞ்சி என்ற இயற்பெயருக்குரிய அடைமொழியாக அமைகிறது. ஈத்த என்பதில் உள்ள 'ஈ’ உயர்ந்தோர் கொடுத்தல் என்ற பொருளது. பாளி என்ற சொல் படுக்கும் அல்லது தூங்கும் இடம் என்று தொடக்க காலத்தில பொருள்பட்டது. பின்னர் முனிவர்கள் தங்கும் இடம், பள்ளிக்கூடம் ஆகிய பொருள்களையும் குறித்தது. மாங்குளம் கல்வெட்டிலும் இச்சொல் இடம் பெறுகிறது.
குறிப்புதவிகள்
ஜம்பை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 307
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 2

தொடர்புடைய கல்வெட்டு