கல்வெட்டு
அம்பலூர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அம்பலூர் |
|---|---|
| ஊர் | அம்பலூர் |
| வட்டம் | வாணியம்பாடி |
| மாவட்டம் | வேலூர் |
| அமைவிடத்தின் பெயர் | அம்பலூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பு |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் அம்பலூர் பேருந்து நிலையத்திற்கு பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் உள்ள நடுகல் ஒன்று வீரத்துடன் இறந்த இரண்டு நாய்களுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது. இந்நடுகல்லில் உள்ள 5 வரி கல்வெட்டு இதனைத் தெரிவிக்கின்றது. நடுகல்லில் கல்வெட்டிற்குக் கீழே இரண்டு பன்றிகளுடன் சண்டையிடும்இரண்டு நாய்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. கல்லின் மேற்பகுதி உடைந்து கல்வெட்டின் தொடக்கம் சிதைந்துள்ளது. அம்பலூரைச் சார்ந்த கோவந் என்பவரின் நாய்களான முழகனும் வந்திக்கா கத்தியும் பன்றிகளைக் கொன்று இறந்தமையை இக்கல்வெட்டுத் தெரிவிக்கின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 12, தமிழகத் தொல்லியல் கழகம், 2001
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 188 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |