Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நாகேசுவரசாமி கோயில் கருவறை, அர்த்தமண்டபத் தெற்குப்புறப் பட்டிகையில் இக்கல்வெட்டு உள்ளது. திருக்கீழ்க்கோட்டத்து இறைவனுக்கு எழுதிக்கொடுத்த நிலவிலை ஆவணம் இது. இராஜகேசரிவர்மனின் (கண்டராதித்தன்) மூன்றாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு இது. சிதைந்துவிட்டது. திருக்குடமூக்கு சபையினர், அரிசலூரிலுள்ள நிலத்தினை, திருக்கீழ்க் கோட்டத்துப் பரமசாமிக்கு 500 கழஞ்சுப் பொன்னுக்கு விற்றதைக் குறிக்கிறது. மதிரை கொண்ட உடையாரான முதற் பராந்தகனின் 38-ஆம் ஆட்சியாண்டில் விதிக்கப்பட்ட 3,000 கழஞ்சு பொன் தண்டத்தினைக் கொடுக்கும் பொருட்டு இந்நிலம் விற்கப்பட்டுள்ளது. பாண்டிப்படையும், ஜலசயனத்து பெருமாள் கோயிலும் குறிக்கப்படுகிறது.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 57
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு