கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நாகேசுவரசாமி கோயிலின் உட்பிரகாரத்தின் வடபுறச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. மூன்றாம் இராஜராஜனின் 20 - ஆம் ஆட்சியாண்டில் திருக்கீழ்க் கோட்டமுடையார் கோயிலின் தெற்குத் திருமடை விளாகத்தில் எழுந்தருளியிருக்கும் நாயனார் மடந்தைபாகருக்குத் திருப்பணி செய்யவும், திருவாபரணங்களுக்கும் நிலம் கொடையளித்ததையும், இக்கோயிலில் உள்ள திருகுடமூக்குடையாருக்குத் திருப்பணிக்காக நிலம் அளித்ததையும் குறிப்பிடுகிறது. இக்கல்வெட்டில் ஸ்ரீ புராணங் கேட்டருளா நிற்க என்று வருகிறது. கீழ்க்கோட்டமுடையார் கோயிலில், கூத்தாடுந் திருஞானசம்பந்தர் மாணிக்கவாசகன் என்பார், தான் எழுந்தருளச் செய்த திருஞான சம்பந்தீசுவரமுடையாருக்கு, அமுது படிக்கு நிலம் அளித்த செய்தி குறிக்கப்படுகிறது. இக்கல்வெட்டுகளில் அவன் அளித்த நிலங்களின் அளவுகளும் எல்லைகளும் குறிக்கப்பட்டுள்ளன.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 84 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |