கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நாகேசுவரசாமி கோயில் கருவறை வடக்குப்புறத்தில் உள்ளது. குடந்தைக் கீழ்க்கோட்டத்து மூல அவைப் பெருமக்கள், இங்கணாட்டைச் சேர்ந்த சிற்றிங்கணுடையான் கோயின் மயிலையாந் ஆன பராந்தக மூவேந்த வேளானுக்கு நிலம் விற்றுக் கொடுத்ததைக் குறிக்கிறது. அந்நிலம், வேதம் வல்லவர்கள் இருபது பேருக்கும் (அபூர்விகள்), சிவயோகிகள் ஐவருக்கும் உணவு படைக்க அளிக்கப்பட்ட நிலம் என்று குறிப்பிடப்படுகிறது. இந்நிலம் முன்னர் அபிஷேக தக்ஷிணையாக இருந்தது. சாலோபோகமாக தற்போது ஆக்கப்படுகிறது. விற்கப்பட்ட ஆறரை நிலத்துக்கும் எல்லைகளும் குறிக்கப்படுகிறது. முதலில் கொடுத்த நிலம் ஆறரையுடன், மேலும் ஒன்றேகால் நிலம் அளித்ததைக் குறிப்பிடுகிறது. ஆனால் முன்னர் 25 பிராமணர்களுக்கே உணவு அளிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்க. இதில் 50 பிராமணர்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளது.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
3 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 64 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |