கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | குடந்தைக் கீழ்க்கோட்டம் |
|---|---|
| ஊர் | கும்பகோணம் |
| வட்டம் | கும்பகோணம் |
| மாவட்டம் | தஞ்சாவூர் |
| அமைவிடத்தின் பெயர் | குடந்தை நாகேசுவரர் கோயில் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நாகேசுவரசாமி கோயில் உட்பிரகாரத்தின் வடக்குச் சுவரில் இக்கல்வெட்டு உள்ளது. திருக்கீழ்க் கோட்டத்தில் உள்ள மடந்தைபாக நாயனார்க்கு இவ்வூர் காமக்காணியுடைய நாராயணன் அம்பலத்தான் என்பானின் மனைவி உய்யவந்தாய் சாணி என்பாள். பங்குனி மாதம் பூரட்டாதி நாளில், திருக்காப்பு நாண், திருப் பாவாடை ஆகியன சாத்தவும், மார்கழி மாதம் திருவாதிரை நாளில் திருவமுது செய்யவும், திருப்பங்குனித் திருநாளில் வழிபாடு செய்யவும். நிலம் கொடையாக அளித்த செய்தி குறிக்கப்படுகிறது. பல இடங்களில் நிலம் தனித்தனியாக இருப்பதால், எல்லா நிலங்களுக்கும் எல்லைகள் தனித்தனியாகக் குறிக்கப்படுகிறது. எல்லை குறிப்பிடுகையில், வானவன் மாதேவி நல்லூர். விக்கிரம பாண்டிய நல்லூர், இராசநாராயண நல்லூர் ஆகிய ஊர்களும்,இராஜராஜ வாய்க்கால், சோழ உத்தம வாய்க்கால் ஆகிய வாய்க்கால்களும் குறிக்கப்படுகின்றன.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
IMAGE
5 Files
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 59 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |