கல்வெட்டு
மணிக்கல்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மணிக்கல் |
|---|---|
| ஊர் | மணிக்கல் |
| வட்டம் | செங்கம் |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| அமைவிடத்தின் பெயர் | வீரமணியான் கல் அருகில் உள்ள உடையார் கொல்லை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
கல்லின் ஒரு பகுதி உடைந்துள்ளது. கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்தியநிலை. உருவத்தின் வலப்பக்கத்தில் குத்துவிளக்கு உள்ளது. இடதுகாலுக்குப் பக்கத்தில் சிமிழும் கெண்டியும் உள்ளன. உருவத்தின் இடப்பக்கம் தோரணம் உள்ளது. உருவத்தின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. ஒரு மன்னனின் ஆறாவது ஆட்சி ஆண்டில் நிகழ்ந்த போரில் வீரனொருவன் வீரமரணம் அடைந்ததைக் குறிப்பதாகத் தெரிகிறது. கல்வெட்டு கோவிசைய என்று ஆரம்பமாவதால் பல்லவ மன்னனைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 84 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |