கல்வெட்டு
விக்கிரமங்கலம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் விக்கிரமங்கலம்
ஊர் விக்கிரமங்கலம்
வட்டம் உசிலம்பட்டி
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் உண்டாங்கல்லு
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இரண்டாவது கல்வெட்டு இங்குள்ள பெரிய குகைத்தளத்தின் நெற்றிப்பகுதியில் வெட்டப்பட்டுள்ளது. பெரிய எழுத்துக்களாகவும் சிதைந்தும் உள்ளன. இதன் காலம் ஏறத்தாழ கி.மு. இரண்டாம் நூற்றாண்டாகும். எங்களுரைச் சேர்ந்த சிழிவன் அதன்தியன் என்பவரால் இக்கொடை நல்கப்பட்டுள்ளது என்பது இதன் பொருள். இரண்டாவது கல்வெட்டில் ‘எம்ஊர்’ என்பதை எமஊர் அல்லது ஏமஊர் எனவும் வாசிக்கலாம். அரிட்டாபட்டி கல்வெட்டிலும் சிழிவன் என்ற ஆட்பெயர் காணப்படுகிறது. ‘அதன்’ என்ற ஆட்பெயரும் ‘தியன்’ என்ற ஆட்பெயரும் அழகர் மலைக் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன. இக்கல்வெட்டில் காணப்படும் ‘தியன்’ என்ற மூன்றெழுத்துக்களும் கள ஆய்வின் போது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை ஆய்வாளர்களால் அண்மையில் படிக்கப்பட்டன. தியன் என்ற ஆட்பெயர் கரூரில் கண்டறியப்பட்டுள்ள மோதிரங்களில் காணப்படுவதும் ஈண்டு ஒப்பு நோக்கற்குரியது. ஐராவதம் மகாதேவன் ‘எம்ஊர் சிழிவன் அதான’ என்று படித்து ‘தானம்’ என்று பொருள் கொள்கிறார்.
குறிப்புதவிகள்
விக்கிரமங்கலம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_000022/TVA_INS_000022_வ...

  • TVA_INS_000022/TVA_INS_000022_வ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 72
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு