கல்வெட்டு
அழகர்கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | அழகர்கோயில் |
|---|---|
| ஊர் | அழகர்கோயில் |
| வட்டம் | மேலூர் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
‘பூவின் கிழத்தி' எனத் தொடங்கும் மெய்க்கீர்த்தியினனான சடையவர்மன் குலசேகரனின் கல்வெட்டாகும். கீழிரணிய முட்டத்தைச் சேர்ந்த திருமாலிருஞ்சோலை நின்றருளிய பரமசுவாமிகளாகிய இவ்வூர் இறைவர்க்கு திருப்படி மாற்றுள்ளிட்டு வேண்டும் என கோயில் ஸ்ரீகாரியம் செய்வனும் ஸ்ரீவைஷ்ணவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க, மன்னன் திருவாய் மொழிந்தருளினபடி நிவந்தங்களுக்கு விடப்பட்ட நிலதானம் பற்றிய செய்தியினை இக்கல்வெட்டு தருகின்றது. இத்தானம் பதின்மூன்றாம் ஆண்டு தொடங்கி தொடர்ந்து நடந்தது என்பதை எதிராமாண்டு, எதிராமாண்டின் எதிராமாண்டு எனக் குறித்து கல்வெட்டப்பட்டுள்ளது. இத்தேவதான நிலங்கள் அடங்கிய ஊர்க்கு திருமலையுடையான் விளாகம் என்று பெயரிடப்பட்டதையும் அறியமுடிகின்றது.
|
|
|
குறிப்புதவிகள்
அழகர் கோயில் கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 158 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |